பிரபல ஆர்ட் டைரக்டர் GK மறைவு

கோபிகாந்த் என்கிற GK (60 வயது)உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.45 மணிக்கு காலமானார்..

ரஜினி விஜய்காந்த் கமல் அஜீத் விஜய் உட்பட பலர் நடித்த 200 படங்களுக்கு மேல் கலை இயக்குனராக பணியாற்றி உள்ளார். தற்போது சின்னத்திரை நடிகராக கலசம் தங்கம் கங்கா போன்ற தொடர்களிலும் நடித்திருக்கிறார்.. அவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும் ஹேமா என்ற மகள் கிருஷ்ணகாந்த் என்ற மகன் உள்ளனர்..

அவரது இறுதி சடங்கு இன்று மாலை 4 மணிக்கு போரூரில் உள்ள மயானத்தில் நடக்கிறது.. வளசரவாக்கத்தில் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ள அவரது உடலுக்கு திரைத்துறையினர் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்..

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஐயோ சகுந்தலாவை இப்படி கலாய்க்குறாங்களே…?

https://www.youtube.com/watch?v=PN4CYRrJKM8&feature=youtu.be

Close