விஜய்க்கு தனுஷ் ஹெல்ப்? இதுதாம்லே நட்பூ!

தமிழகமே கொண்டாடுகிற ஹீரோக்கள் பலர் தங்களுக்குள் நட்பாக இருக்கிறார்களா என்றால், பளிச்சென சொல்லிவிடலாம் ‘இல்லை. இல்லவே இல்லை’ என்று! ஒருகாலத்தில் அடிக்கடி நடக்கும் ‘சாயங்கால’ சந்திப்புகளில் கூட அவரவர் ஈகோவை அவிழ்த்து தோளில் போட்டுக் கொண்டு திரிந்த இவர்கள், பார்ட்டி முடிகிற நேரத்தில் பப்ளிமாஸ் நசுக்கப்பட்டது போல திரும்புவார்கள்.

ஆனால் விஜய் மட்டும் அவர்களில் வித்தியாசமானவர். தன்னை விட வயது குறைந்த நடிகர்கள், மார்க்கெட் வேல்யூவே இல்லாத நடிகர்களுடன் கூட மனமார்ச்சர்யம் இல்லாமல் பழகுவார். அப்படியிருப்பவருக்கு தனுஷ் உதவியதில் என்ன ஆச்சர்யம் இருக்க முடியும்?

அப்படியென்ன உதவி?

கடந்த சில வாரங்களுக்கு முன் பெப்ஸி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதல்லவா? மெர்சல் பட வேலைகள் நின்றுவிடுமோ என்கிற அச்சம் தொற்றிக்கொண்டதாம் விஜய்க்கு. டப்பிங் வேலைகள் பாதிக்கப்படுகிற சூழல். டப்பிங் பணியாளர் வேலை செய்ய தயாராக இருந்தும், ஸ்டூடியோ திறந்திருக்க வேண்டுமே? அந்த நேரத்தில்தான் தனுஷின் அலுவலகத்திலேயே இயங்கி வரும் ஸ்டூடியோவை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கதவை திறந்துவிட்டாராம் தனுஷ்.

ஊரே ஸ்டிரைக் பீதியிலிருக்க, மெர்சல் டப்பிங் மட்டும் எவ்வித தடங்கலுமின்றி நடந்தது. வாழ்க நட்பு!

https://youtu.be/JGrNr1-vezY

3 Comments
  1. SATISHR says

    anthanan, Saw your movie review on youtube. Sema thairiyum ungalukku. Summa Kili maari pesureenga.

    1. Murali says

      Anthanan makku, avan sollarathu un Ali kuralai.

  2. John Moses says

    Thalaivali Joseph Vijay is a SELFISH ACTOR.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிரபல ஆர்ட் டைரக்டர் GK மறைவு

கோபிகாந்த் என்கிற GK (60 வயது)உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 11.45 மணிக்கு காலமானார்.. ரஜினி விஜய்காந்த் கமல்...

Close