யூனிபார்மை மாட்டிட்டாரு அருண்விஜய்! ச்சும்மா கிழி…கிழி…கிழி…

ஆபரேஷன் சக்சஸ் என்று அருண் விஜய்யும் இறங்கிவிட்டார். பொதுவாகவே வாட்டசாட்டமான ஹீரோக்களை பார்க்கும் போதெல்லாம் இந்தாளுக்கு ஒரு யூனிபார்மை மாட்டிவிட்டுடணும் என்கிற கோணத்தில் பார்க்கிறார்கள் இயக்குனர்கள். அவர்கள் நம்பிக்கையை வீணடிப்பதில்லை ஹீரோக்களும். சிங்கம் சூர்யாவாக இருந்தாலும் சரி, தங்கப்பதக்கம் சிவாஜியாக இருந்தாலும் சரி. வால்ட்டர் வெற்றிவேல் சத்யராஜாக இருந்தாலும் சரி… கோடு கிழிச்சா அதில் ரோடு போடுகிற நடிகர்கள். ஆமா… இந்த லிஸ்ட்டில் அஜீத், விஜய்யெல்லாம் வர மாட்டாங்களா என்றால், ஒரு சின்ன நடுக்கத்தோடு இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

போகட்டும்… அருண் விஜய் மேட்டருக்கு வருவோம். இவரது திணவெடுத்த தோள்களையும் தீர்க்கமான கண்களையும் கருத்தில் கொண்ட இயக்குனர்களில் பலர், போட்ருவோமா யூனிபார்மை என்று அணுகிய போதெல்லாம், போகட்டும் சார் கொஞ்ச நாள் என்றே கூறிவந்தார் அருண். ஆனால் ஈரம் அறிவழகன் கேட்டபோது அதை தள்ளிப்போட முடியவில்லையாம் அவரால். ஏனென்றால், எதையும் பர்பெக்ட்டாகவே செய்து பழக்கப்பட்டவர் அறிவழகன். அந்த நம்பிக்கை ஒரு புறத்திலும், அவர் தேர்ந்தெடுத்த எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கதை இன்னொரு பக்கத்திலும் நின்று உசுப்பிவிட, டைட்டாக யூனிபார்ம் அணிந்து ஸ்ரெயிட்டாக எதிரிகளை பந்தாட ஆரம்பித்துவிட்டார் அருண் விஜய். படத்தின் பெயர் குற்றம் 23.

“மருத்துவ உலகத்தின் கிரைம்தான் இந்த படத்தின் மையக்கரு. எத்தனையோ பேய் படங்கள் வந்திருக்கு. ஆனால் என்னோட ஈரம் அதிலேர்ந்து வித்தியாசப்பட்டிருக்கும். எத்தனையோ ஸ்போர்ட்ஸ் கதைகள் வந்திருக்கு. ஆனால் என்னோட வல்லினம் அதிலேர்ந்து வேறு பட்டிருக்கும். அதுபோலதான் இதுவும். எத்தனையோ மெடிக்கல் க்ரைம் கதைகள் வந்திருக்கு. ஆனால் நிச்சயம் நான் ஒரு வித்தியாசத்தை கொடுப்பேன்” என்றார் அறிவழகன்.

கதைதான் ராஜேஷ்குமார். திரைக்கதை முழுக்க அறிவழகன்தான் எழுதியிருக்கிறார். அருண் விஜய்யை வேறொரு லெவலுக்கு கொண்டு போகிற படமாக இருக்கும் என்றார் அவர். அருண்விஜய்யின் சட்டை மட்டுமல்ல, எதிர்காலத்தில் அவரது சினிமா வாழ்க்கையும் முடைப்பாக நிற்க ஒரு வாழ்த்தை போட்ருவோம்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கபாலி படத்தின் விநியோக உரிமை: கோவையை வளைத்த பெப்சி சிவா

இயக்குனர், ஒளிப்பதிவாளர், வசன எழுத்தாளர் என்று பன்முகம் கொண்டவர் பெப்சி சிவா. தமிழ்சினிமாவை கட்டி இழுத்துக் கொண்டிருக்கிற பெப்சி என்ற பெருத்த அமைப்பின் தலைவர். தற்போது கபாலி...

Close