அருவி அடைந்த 15 கோடி! வாய் பிளக்கும் திரையுலகம்!

தமிழ்சினிமாவின் மெகா பட்ஜெட் படங்கள் கூட செய்யாத சாதனையை ‘அருவி’ செய்துவிட்டது. கொஞ்சம் பாக்கெட் தாராளமான தயாரிப்பாளர்கள் கிடைத்துவிட்டால் போதும்…. அவர்களையே அரைத்து கூழாக்கி சாப்பிட்டு விடும் இயக்குனர்கள், சொன்ன பட்ஜெட்டுக்கும் படத்தை முடிக்கிற பட்ஜெட்டுக்கும் சம்பந்தமில்லாமல் செய்து விடுவார்கள். கடைசியில் வரவு செலவு கணக்கு பார்த்தால், ஆயுள் காலம் முழுக்க அச்சத்தை விழுங்குகிற மாதிரி ஆகிவிடும் தயாரிப்பாளரின் நிலைமை.

ஆனால் அப்படியெல்லாம் அச்சப்பட வைக்கவில்லை அருவி. மிக குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இப்படம், உலகம் முழுக்க தியேட்டர்களில் வசூலித்த தொகை தியேட்டர் கமிஷன் போக தயாரிப்பாளர் கையில் நிம்மதியாக புரண்டிருக்கிறது. கிட்டதட்ட 15 கோடி என்கிறது அதிகாரபூர்வமான தகவல்கள்.

வெறும் தியேட்டர் கலெக்ஷன் மட்டும் இவ்வளவு என்றால், பிற மொழி ரைட்ஸ், சேட்டிலைட், சிங்கிள் டைம் ஆன் லைன் ஒளிபரப்பு இவற்றால் எவ்வளவு கிடைத்திருக்கும்?

கிளறிய குப்பையையே கிளறி, அலறிய டயலாக்குகளே அலறி, ஒரு வெற்றுப்படத்தை கொடுப்பதற்கு இப்படி முயற்சித்தால் தமிழ்சினிமாவின் தரமும் உயர்த்தப்படுமே? இனிமேலாவது உருப்புடுவீங்களா வெற்று டைரக்டர்ஸ்?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
குலேபகாவலி விமர்சனம்

ரப்பர் மனுஷன் பிரபுதேவாவின் தமிழ்ப்பட மார்க்கெட் மீது ஆவியை ஏவி விட்டால் கூட மன்னித்திருக்கலாம். குலேபகா‘வலி’யை ஏவி விட்டிருக்கிறார்கள். ஒரு கும்பல் புதையலை தேடிப் போவதுதான் கதை....

Close