அமிதாப்பை இயக்குவாரா ஐஸ்வர்யா தனுஷ்? புது ரூட் பில்டப்!
தீக்குச்சிய கிழிச்சி சூரியனை பற்ற வச்ச மாதிரி, சில ஹிட்டுகள்தான் பிரமாண்டமாக பேச வைக்கும். பவர் பாண்டி படத்திற்காக எட்டு திசையிலிருந்தும் வரும் பாராட்டுகள், அப்படியொரு சூரியனை பற்ற வைத்துவிட்டது தனுஷ் அண்டு பேமிலிக்கு. முக்கியமாக இப்படத்தை காலையில் ஒன்பது மணி சுமாருக்கு பார்க்க ஆரம்பித்த ரஜினி, படம் முடிந்ததும் அப்படியே தனுஷை அழைத்துக் கொண்டு தன் கேளம்பாக்கம் பண்ணைக்கு போய்விட்டாராம். இரவு எட்டு மணிவரை அவர் திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருந்தது பவர் பாண்டி படத்தை பற்றிதான்.
கூடவே ரஜினியின் தோழரும் தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவருமான மோகன்பாபுவும் இருந்திருக்கிறார். இந்தப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப் போவதாகவும், அதில் ராஜ்கிரண் கேரக்டரில் மோகன்பாபு நடிக்கப் போகிறார் என்பதும் முக்கிய முடிவு. அப்படியே அங்கு எடுக்கப்பட்ட இன்னொரு முடிவுதான் இம்பார்ட்டன்சிலும் இம்பார்ட்டன்ஸ்!
பவர் பாண்டி படத்தை இந்தியில் எடுப்போம். அதை ஐஸ்வர்யாவே இயக்கட்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் ரஜினி. இவ்வளவு தூரம் யோசித்தவர், அதில் அமிதாப்தான் நடிக்க வேண்டும் என்பதையும் யோசித்திருக்க மாட்டாரா?
ரஜினி உதவியுடன் அமிதாப் கால்ஷீட் கிடைக்கலாம். அதை ஐஸ்வர்யா சரியாக கையாண்டால், இயக்குனர் ஐஸ்வர்யாவை யாரால் தடுக்க முடியும்?
https://www.youtube.com/watch?v=XENTYAhgzEc&feature=youtu.be
All the Best Smt. Aishwarya Dhanush
Ithellam remba over. Dhanush talented. Rajini proved. Avanga daughter/ wife thakuthiya Vida inthammavukku enna. She need to prove before