சீன நடிகைக்கு ரெட் கார்ப்பெட்! எரிச்சலில் ஐஸ்வர்யா ராஜேஷ்?
கடந்த வாரம் திரைக்கு வந்த படங்களில், ‘பறந்து செல்ல வா’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள்தான் வாய்த்திருக்கிறது. சிங்கப்பூரை சல்லி விலையில் காட்டிட்டாங்கப்பா… என்பதே இப்படத்தின் சிங்கிள் ப்ளஸ் விமர்சனமாக இருந்து வந்த நிலையில், திடீர் திருப்பமாக மேலும் ஒரு விஷயத்தில் அட்ராக்ட் ஆகிக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். அந்த ஒரு அட்ராக்ஷன் படத்தின் ஹீராயினான நரேல் கேங்!
சிங்கப்பூர் மலேசியாவில் தயாராகி வரும் சீரியல்களில் நடித்து வரும் பிரபல ஹீரோயினாம் இவர். கபாலி படப்பிடிப்பு நடக்கும் போது எப்படி ரஜினியை சுற்றி சுற்றி வந்து ஆட்டோகிராப் வாங்கினார்களோ, அப்படி இந்தப்படத்தின் ஷுட்டிங்கின் போது நரேல் கேங்கிடம் ஆட்டோகிராப் வாங்கினார்களாம் சிங்கப்பூர் ஜனங்கள். அப்படியொரு ஆளுமையான அழகை, இங்கேயும் ரசிக்க ஆரம்பித்திருக்கிறது கூட்டம். பேதாத குறைக்கு படத்தில் அவர் போடும் பைட், சைனீஸ் படங்களுக்கு இணையானது.
அவர் திரையில் வருகிற காட்சிகளுக்கெல்லாம் லபோதிபோ என்று கைதட்டல்! நிஜமாகவே படக்குழு இப்படியொரு வரவேற்பை எதிர்பார்க்கவில்லையாம். இங்கிருந்து அந்த பேரானந்தத்தை செல்போனில் படம் பிடித்து நரேலுக்கும் அனுப்பி வைத்தார்களாம். அப்படியே இன்னொரு வயிற்றெரிச்சல். புதிதாக அடிக்கவிருக்கும் போஸ்டர்களில் ஐஸ்வர்யா ராஜேஷ், லுத்புதின் ஆகிய இருவரது படங்களையும் நீக்கிவிட்டு நரேல் மட்டும் இருப்பதை போல டிசைன் பண்ணிக் கொண்டிருக்கிறார்களாம். (ஐஸ்வர்யா எந்தளவுக்கு எரிச்சல் ஆகப் போகிறாரோ?)
வந்தாரை வாழ வச்சே பெருமைப்படும் தமிழன்? நடத்துங்க ராசா நடத்துங்க!