கடிதம் எதிரொலி! கவுதமி உருவப்படம் எரிப்பு! அரசியலில் திகுதிகு…
வெற்றி கொண்டான் மாதிரியோ, தீப்பொறி ஆறுமுகம் மாதிரியோ யாராவது கவுதமிக்கு எதிரில் வந்து கர்ஜித்தால், மயக்கம் தெளிய மூன்று நாட்கள் ஆனாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், சிங்கம் போல கர்ஜித்து சிறுத்தை போல உறுமுகிற ஏரியாதான் அரசியல். இங்கு வாயை வைத்துக் கொண்டு சும்மாயில்லாமல் ஒரு விளக்கம் கேட்கப் போக, கவுதமியின் பெயரை கண்டபடி நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள் அதிமுகவிலிருக்கும் ஒரு குரூப்! (தொண்டர்களில் பலர் ‘சரியாதான் கேட்டாங்க’ என்று சொல்வது தனி)
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய கவுதமி, அது தொடர்பான விளக்கம் கேட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதுதான் தெரியுமே? அந்த முதல் கடிதத்திற்கு ஒரு பதிலும் இல்லை என்ற நிலையில், அதே போலொரு இன்னொரு கடிதத்தையும் எழுதி விளக்கம் கேட்டிருக்கிறார் கவுதமி.
இந்த கொசுத் தொல்லை தாங்கலையேடா நாராயணா… என்று நினைத்திருக்கலாம். திருச்சியை சேர்ந்த அதிமுகவினர், கவுதமியின் உருவப்படத்தை எரித்து தங்கள் எதிர்ப்பை காட்டியிருக்கிறார்கள். அதிமுக வை சேர்ந்த சிலர், கவுதமியின் சொந்த வாழ்க்கையை பற்றி பேசி, முதல்ல அதை சரி பண்ணுற வழிய பாரும்மா… என்றும் பேசி வருகிறார்கள்.
எது எப்படியிருந்தாலும், கவுதமி விடுவதாக இல்லையாம்!
அக்கா வீட்டுக்கு ஒரு ஆட்டோ சொல்லேய்….ய்!
https://youtu.be/m1yOmUBxEWU