நீதிமன்ற மீறலா? மெர்சல் விஷயத்தில் அட்லீ விளக்கம்

எந்த நேரத்தில் மெர்சல் என்று தலைப்பு வைத்தார்களோ? விஜய் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை மெர்சல் ஆக்கி வருகிறது அப்படம். எல்லாம் முடிஞ்சு ரிலீஸ்னு வர்ற நேரத்துல இப்படியொரு பிரச்சனையா? என்று தலைப்பு பஞ்சாயத்து குறித்து வருந்திய ரசிகர்கள், ஆங்காங்கே கூட்டு பிரார்த்தனையில் ஈடுபடாத குறைதான். எப்படியோ… நீதிமன்றம் அந்த தலைப்புக்கு இடைஞ்சல் வராமல் ஒரு தீர்ப்பளித்தது.

ஆனால் மெர்சல் தலைப்பை எங்கும் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நேரத்தில்தான் மெர்சல் என்ற தலைப்புடன் சென்சாருக்கு அப்ளை பண்ணியது அட்லீ டீம். அப்ப கோர்ட் தீர்ப்பை நீங்களே மதிக்கலையா? நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சென்சார் அதிகாரிக்கு தெரியுமா, தெரியாதா? தெரிந்திருந்தால் எப்படி சென்சார் செய்ய அனுமதித்தார்? இப்படி பல்வேறு கேள்விகளை அட்லீயிடம் எழுப்பினோம்.

“எங்களுக்கு இதில் எந்த குழப்பமும் இல்ல. வேறெந்த தவறும் நடந்துவிடவும் இல்லை. சென்சாருக்கு ஆன் லைன்ல விண்ணப்பிக்கிற முறை இருக்கு. அதன்படி நாங்க போன மாசமே விண்ணப்பிச்சுட்டோம். அதுக்கு பிறகுதான் தலைப்புக்கு இடைக்கால தடை வந்திச்சு. நாங்க சர்டிபிகேட் வாங்குற நேரத்தில் அந்த இடைக்கால தடையும் நீக்க பட்டிருச்சு. ஸோ… எந்த குழப்பமும் இல்லே” என்றார்.

விஜய்யை மேஜிக் நிபுணராக சித்தரிக்கும் ஒரு இயக்குனருக்கு, ஒரு சின்ன கேள்விக்கு பதில் சொல்லி தப்பிக்க தெரியாதா என்ன?

https://youtu.be/Ml1lTMmvIoQ

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சந்தானத்தை இனி சாதி பார்த்துக்கும்! கை கலப்பும்… கலகலப்பும்!

Close