சந்தானத்தை இனி சாதி பார்த்துக்கும்! கை கலப்பும்… கலகலப்பும்!
நல்ல புள்ளை போல சினிமாவுக்குள் என்ட்ரி கொடுக்கும் பலரும், கொஞ்சம் வளர்ந்த பின் தான் பிறந்த சாதியை உயர்த்தி பிடிப்பது கொடுமையிலும் கொடுமை. பல வருஷமாகவே நாடார் சமூக காவலராக மதிக்கப்படுகிறார் சரத்குமார். அந்த கால கார்த்திக்கின் படங்களுக்கு வண்டி கட்டிக் கொண்டு வந்து சேவித்த பலரும் முக்குலத்தோர்கள்.
கருணாஸ், விவேக் இருவரும் தான் சார்ந்த சாதியை முகமூடியாக அணிந்தபடியே வலம் வருகிறார்கள் இப்பவும்.
டைரக்டர் பா.ரஞ்சித், அவர் இயக்கிய ‘கபாலி’ என்ற உருப்படாத படத்தை விமர்சித்தவர்களையெல்லாம் தலித்துக்கு எதிரி என்று வசை பாடினார்.
இப்படி சாதிக்குள் எலும்பை சுருக்கிக் கொண்டு திரியும் அத்தனை பேருக்கும் தான் சளைத்தவன் அல்ல என்று நிரூபித்திருக்கிறார் சந்தானம். இவர் வன்னிய குலத்தை சேர்ந்தவராக்கும். சமீபத்தில் ஒரு பில்டருடன் ஏற்பட்ட மோதலில் அவரது மூக்கை உடைத்து ரத்தம் பார்த்த சந்தானம், ஆள் எஸ்கேப். போலீஸ் வலை வீசி தேடி வருகிறது அவரை. ஒருபுறம் பணத்தை கொடுத்து ஏமாந்திருந்தாலும் சந்தானம் கெட்டவராகிவிட்டார் இப்போது.
அடிபட்ட வழக்கறிஞர் பா.ஜ.க வை சேர்ந்தவராம். அவருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய பிஜேபி கட்சிக்காரர்கள் சந்தானத்தின் மீது நடவடிக்கை கோரி வலியுறுத்தியிருக்கிறார்கள். சந்தானத்திற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய வன்னிய குல பா.ம.க வினர், எங்க சாதியை சேர்ந்த சந்தானத்தின் மீது நடவடிக்கை பாய்ந்தால் நடக்கறதே வேற என்று எச்சரித்திருக்கிறார்கள்.
நல்லவன் கெட்டவன் என்பதெல்லாம் சாதிக்கு அப்பால்தான் போலிருக்கு!
https://youtu.be/Ze-GImRkf0E
டைரக்டர் பா.ரஞ்சித், அவர் இயக்கிய ‘கபாலி’ என்ற உருப்படாத படத்தை விமர்சித்தவர்களையெல்லாம் தலித்துக்கு எதிரி என்று வசை பாடினார்.”
என்னது கபாலி உருப்படாதா படமா!!!
இப்ப சம்பந்தமில்லாம வசை பாடுவது யாருன்னு குழப்பமா இருக்கு.
This guy is a comedy piece, doing marketing for HaraHaraMahadevi. What else can expect from him?
சந்தடி சாக்கில், சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் கபாலி. வசூலில் பல சாதனைகளை புரிந்த கபாலி உங்களுக்கு உருப்படாத படமா ??? இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
வாழ்க கலியுக தெய்வம் ரஜினி அவர்கள்