கபாலிக்கு கணக்கு காட்டுவீங்களா? ரஜினியை அமீர் விமர்சித்த பின்னணி இதுதான்!

‘பாக்கெட்லேயே கற்களை வச்சுட்டு திரியுவாங்களோ?’ என்கிற டவுட்டை கிளப்பி வரும் ‘கருத்து கலவர’ ராஜாக்களில் முக்கியமானவர்களின் லிஸ்ட்டை எடுத்தால் முதலிடத்தில் டிராபிக் ராமசாமியும், முப்பதாவது இடத்தில் டைரக்டர் அமீரும் இருப்பார்கள் போலிருக்கிறது. சில மாதங்கள் கூட ஆகியிருக்காது… டைரக்டர் சேரனும் அமீரும் ரஜினியை “அரசியலுக்கு வாங்க” என்று அழைத்து! இப்போது கேட்டால், “அது போன மாசம்… இது இந்த மாசம் என்பார் அமீர்.

சில தினங்களுக்கு முன் ரஜினியை ஒரு பொது மேடையில் வைத்து வாங்கு வாங்கென வாங்கிவிட்டார்.

“பிரதமர் மோடியின் அறிவிப்பு புரட்சியானது என்று ரஜினி எப்படி கூறுகிறார்? கபாலி படம் அரசு நிர்ணயித்த டிக்கெட் விலைக்கு விற்பனை செய்யப்பட்டதா, மொத்த படத்தின் வருமானம் எவ்வளவு என்று ரஜினிகாந்த் கணக்கு காட்ட முடியுமா ? இதுவரைக்கும் எந்த பிரச்சினைக்கும் குரல் கொடுக்காத ரஜினி மோடியின் 500, 1,000 ரூபாய் செல்லாது என அறிவித்தற்கு வரவேற்பு அளித்தது ஏன்?” இப்படி அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி, படபடவென கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டார் அமீர்.

அமீர் இப்படி ரஜினியை குறி வைத்து விளாசினாலும், பாதிக்கப்படப் போவது கபாலி படத்தின் தயாரிப்பாளர் தாணுதான். அமீர் கேள்வி கேட்டுவிட்டாரே என்பதற்காக எந்த இன்கம்டாக்ஸ் அதிகாரியும் தாணுவின் வீட்டுக் கதவை தட்டப் போவதில்லை. ஆனால் அமீரின் கேள்வி சில சங்கடங்களை தரும் அல்லவா? அதுதான் அமீருக்கும் தேவை. ஏன்?

விஜய்யிடம் கதை சொல்லி அதில் அவர் நடிப்பதாக சம்மதமும் வாங்கியிருந்தார் அமீர். பருத்தி வீரனுக்கு அப்புறமாக நடந்த சங்கதி இது. அந்தப்படத்தை தயாரிப்பாளர் தாணுவே தயாரிப்பதாக இருந்தது. என்ன காரணத்தாலோ அமீரை தள்ளி தள்ளி வைத்த தாணு, நடுவில் ஏ.ஆர்.முருகதாசை கொண்டு விஜய்யின் கால்ஷீட்டை வாங்கிவிட்டார். அதற்கப்புறமும், “உங்க படத்தை நம்ம கம்பெனியில் பண்றோம்” என்று அமீருக்கும் நம்பிக்கை கொடுத்து வந்தார். இனிமேல் நடக்கப் போவதில்லை என்று தெரிந்த பின்புதான், ரஜினிக்கு வீசிய கத்தி, தாணுவின் மூக்கையும் சேர்த்து உரசிவிட்டுப் போவது போல ஒரு யுக்தியை கையாண்டிருக்கிறார் அமீர்.

பொதுநலத்துல சுயநலம்! சுயநலத்துல பொதுநலம்! யப்பா… என்னா நாடகம்ப்பா?

 

1 Comment
  1. முத்து says

    AMEER IS A selfish

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“ மோடி யோசித்திருக்கலாம்… ” விஜய்யின் துணிச்சல் மொமென்ட்!

கருத்து சொல்வதில் இருக்கிற கஷ்டம், கை வண்டி இழுப்பதில் கூட இல்லை! எதை சொன்னாலும் அதில் நொட்டை நொள்ளை என்று விமர்சிக்க இன்னொரு கூட்டம் கிளம்பும். இந்த...

Close