அனிதாவும் நானே! அம்மனும் நானே! பிக் பாஸ் ஜுலியின் லுக்கோமேனியா
‘ஐயய்யோ… சினிமாவுல நடிக்க எங்க வீட்ல ஒத்துக்க மாட்டாங்கப்பா’ என்று பம்மாத்து காட்டி வந்த பிக்பாஸ் ஜுலி, படு பயங்கர வாய்ப்பு தேட ஆரம்பித்திருக்கிறார். மாற்றத்துலேயே பெரிய மாற்றம் ஏமாற்றம்னு பெரியவங்க சொன்னது போல, ஜூலியை வேலி போட்டு தடுக்காத குறையாக தடுக்கிறார்கள் முன்னணி இயக்குனர்கள்.
ஆனால் அறிமுக இயக்குனர்களுக்கு ஜுலியே ஒரு ஜுஸ் பாக்கெட்டாக தெரிய ஆரம்பித்திருக்கிறார். மருத்துவ மாணவி அனிதாவின் கதையை படமாக்கி வருகிறார்கள். அதில் அனிதாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஜுலி. செய்தி வந்த நாளில் இருந்தே, ஏம்மா…. அனிதா மேல வச்சுருக்கிற அன்பையும் பரிதாபத்தையும் நீ வந்து காலி பண்ணிடுவ போலிருக்கே? என்று கதறுகிறார்கள் ரசிகர்கள்.
இந்த நிலையில்தான் இன்னொரு வாய்ப்பு. ஒரு சாமி படத்தில் அம்மனாக நடிக்கிறார் ஜுலி. மகேஷ் என்பவர் இயக்கவிருக்கும் இப்படத்தின் போட்டோசெஷன் சில தினங்களுக்கு முன் நடந்ததாம். கையில் வேப்பிலை, விரித்துப் போட்ட கூந்தல் சகிதம் ஜுலி நாக்கை துருத்த, அருள் வந்து ஆடாத குறையாக ஓடிப் போனாராம் போட்டோ கிராபர்.
நடிப்புல ஒரு துடிப்பு இருக்கணும்ல? அதான் இப்படி.