ஜெ. சமாதியில் அமுதா செய்த முரட்டு சத்தியம்! ஒருவழியா ஓகே ஆனது!

ஜெயலலிதா இறந்த சோகம் தீரணும் என்று ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகள் நினைத்திருந்தால், அப்பவே அதற்கு ஒரு மருந்து இருந்தது. அதுதான் அப்போது தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருந்த திரைப்படமான ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’. ஆனால் நாட்டுக்கும் அமுதாவுக்கும் ஒரே நேரத்தில் துரதிருஷ்டம்.

அப்போது விட்டுப் போன சிரிப்பை மறுபடியும் மீட்டெடுக்க ஒரு வாய்ப்பு. ஆன்லைன் பைரசிக்குள் அகப்படாத படம் இது. அம்மா இறந்த துக்கம் காரணமாக இருந்திருக்கலாம்… இந்த படத்தை தமிழ்ராக்கர்ஸ் புண்ணியவான் கண்டு கொள்ளாமல் விட்டுவிட, புத்தம் புது நம்பிக்கையுடன் இம்மாதம் 30 ந் தேதி மீண்டும் திரைக்கு வருகிறது ‘அழகென்ற சொல்லுக்கு அமுதா’. தான் விரும்பிய பெண் செருப்பாலடித்தாலும் பின் தொடர வேண்டும். விடாப்பிடியாக காதலிக்க வேண்டும் என்பதுதான் படத்தின் நாட்.

மேலோட்டமாக பார்த்தால், இதெல்லாம் தப்பாச்சே என்று தோன்றும். ஆனால் படத்தின் திரைக்கதையும், அதில் வழியும் காமெடியும், கதாநாயகன் ரிஜன் சுரேஷின் அப்பாவி முகமும், அசத்தலான டயலாக் டெலிவரியும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.

ஜெ. புதைக்கப்பட்ட அடுத்த நாளில் இருந்தே படத்தை மீண்டும் தியேட்டர்களில் வெளியிட வேண்டும் என்று தவியாய் தவித்து வந்த படக்குழுவுக்கு, நெரிசலும் நீண்ட வரிசையும் கட்டையை போட்டு வந்தது. படத்தை ரீ ரிலீஸ் பண்ணியே தீருவோம் என்று ஜெ. சமாதியில் சசிகலா போல முரட்டு சத்தியம் கூட பண்ணிவிட்டு வந்தார்களாம். இப்போதுதான் ரூட் கிளியர்.

எனக்கு உனக்கு என்று தியேட்டர்காரர்கள் போட்டி போட்டு வருவதால், அமுதாவுக்கு ஆல் ஏரியாவிலும் வரவேற்பு. சுமார் 200 தியேட்டர்களில் வெளியிட திட்டம் வகுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஸ்டிரைக்கை சாகடிச்சுட்டு, காதலை வாழ வைக்கணுமா பிரதர்… என்றால், ‘முதல்ல நாங்க வாழணுமே?’ என்கிறார் இப்படத்தின் ஹீரோ ரிஜன்.

ஆமென்!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கவுதம்மேனனின் பேராசை! கண்ணீர் வடிக்கும் இயக்குனர்

Close