கவுதம்மேனனின் பேராசை! கண்ணீர் வடிக்கும் இயக்குனர்
அனுபவத்தை போல சிறந்த பாடம் உலகத்தில் வேறு எதுவுமே இல்லை. ஐயோ பாவம்… தானே தன் கையை ஊன்றி மேலெழுந்த ஒரு இளைஞருக்கு நேர்ந்த அனுபவம், யாரை பார்த்தாலும் ‘திருடனா இருப்பானோ…’ அச்சப்பட வைத்திருக்கிறது. (அதுதான்யா கோடம்பாக்கத்தின் குணம்)
‘துருவங்கள் 16’ திரைப்படம் வெளியாகிற வரைக்கும் பத்தோடு பதினொன்று என்று நினைக்க வைத்த இயக்குனர் கார்த்திக் நரேன், அப்படத்தின் வெற்றிக்குப்பின் ‘நமக்கும் ஒரு சான்ஸ் கொடுங்க’ என்று முன்னணி நடிகர்களால் அழைக்கப்படுகிற அளவுக்கு சிறந்த இயக்குனர் ஆனார். பள்ளம் எது? பஞ்சு மெத்தை எது? என்றே புரியாத ஊரில், அந்த ஒரு வெற்றியை வைத்துக் கொண்டு நடந்தவர், பொதுக்கென விழுந்தது பள்ளத்தில்தான்.
கவுதம் மேனனின் பிரஷர் காரணமாக அவரோடு இணைந்து ‘நரகாசுரன்’ என்ற படத்தை தயாரித்து இயக்க முன் வந்தார். அந்த நேரத்திலும் அவரிடம் ஏதோ தயக்கம் இருந்தது. அதைதான் இன்ட்யூஷன் என்பார்களோ? ஆனால் முன்னணி பைனான்சியர் ஒருவரின் தலையீட்டால்தான் கவுதம் மேனன் கார்த்திக் நரேனுடன் இணைத்து வைக்கப்பட்டார் என்றும் கூறுகிறார்கள். வெறும் ஐந்து லட்சம் தந்துவிட்டு பார்ட்டனராக சேர்ந்த கவுதம்மேனன், இந்தப்படத்தை காட்டியே சுமார் 15 கோடி வரைக்கும் வெளியில் கடன் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமல்ல… கார்த்திக் நரேனின் நாலெட்ஜ் இல்லாமலே சாட்டிலைட் வியாபாரத்தையும் முடித்து பணம் வாங்கிவிட்டாராம்.
ஆரம்பத்தில் ஷுட்டிங் எடுக்ககவே பணம் தராததால் தானே பணத்தை செலவு செய்து படத்தை முடித்துவிட்டார் கார்த்திக் நரேன். ரிலீஸ் நேரத்தில் எல்லா சனியனும் ஒன்று கூடுமே? அப்போதுதான் கழுத்தில் கத்தியை வைத்தார் கவுதம் மேனன். வியாபாரத்துல பாதி லாபம் எனக்கு வந்தாகணும் என்கிறாராம். அது மட்டுமல்ல… இவர் இந்தப்படத்தை காட்டி வாங்கிய பணத்தை செட்டில் செய்தால்தானே நரகாசுரன் திரைக்கு வரும்?
கழுத்து வரைக்கும் சிக்கி விட்ட கார்த்திக் நரேன் தப்பிக்க முடியாமல் திணறி வருகிறார். அவரது சொந்தப்பணம் ஏராளமாக இதில் முடங்கியிருக்கிறது. என்ன செய்யப் போகிறாரோ? இந்த நேரத்தில் மனம் நொந்து தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்திருக்கிறார்.
அதில், ‘சில நேரங்களில் தவறான நம்பிக்கை உங்களைக் கொன்றுவிடும். ஒருவர் மீது நம்பிக்கை வைப்பதற்கு முன், ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள். அப்படி தவறான நம்பிக்கை வைத்தால், உங்கள் கனவு எல்லாத் திசைகளில் இருந்தும் சிதைந்து போவதை நீங்கள் காண நேரிடும்” என்று கூறியிருக்கிறார்.
இந்த கவுதம் மேனன் தயாரிப்பாளர் சங்கத்தில் துணை தலைவர் பதவியில் வேறு இருக்கிறார்.
என்னாவொரு லட்சணம்யா இது?