போலீஸ் அடி மறக்கல! போகன் கொடி பறக்கல!
24 மணி நேரத்தில் 20 மணி நேரத்தை சினிமாவுக்கே செலவிடும் தொலைக்காட்சிகள் கூட, சில நேரங்களில் சமுதாய பிரச்சனை பற்றியும் அலசுவதால் ஏதோ ஓரளவுக்கு மற்ற விஷயங்களையும் சிந்திக்க நேரம் ஒதுக்குகிறது மக்கள் மனசு. அப்படிப்பட்ட தொலைக்காட்சிகளே கடந்த ஒரு வாரமாக விடாமல் கூவிக் கொண்டிருக்கும் பிரச்சனை, போலீஸ் நடத்திய வன்முறையும் தடியடியும் பற்றிதான். ‘கொளுத்தறவன தடுக்க வந்த போலீசே கொளுத்துதே…’ என்று குமுறி குமுறி கோபப்படுகிற திருவாளர் பொதுஜனம், அப்பாவி ஜனங்களை பதம் பார்க்கிற போலீஸ் கையில் கட்டை முளைக்க… என்று சாபம் கொடுத்தும் வருகிறது.
இந்த நேரத்தில் போய் போலீசை நல்லவராக காண்பித்தால் அந்தப்படத்தை எந்த பொதுஜனம்தான் ரசிக்கும்?
இந்த உண்மை புரியாமல் இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது போகன். ஜெயம் ரவியும் அரவிந்த்சாமியும் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தில், மார்க்கெட் போன ஹன்சிகாவும் இருக்கிறார். படத்தை வெளியிடும் முடிவை அவசரம் அவசரமாக எடுத்திருக்கிறார்கள். ஆனால் திகைத்துப் போன தியேட்டர் வட்டாரம், “இப்போ எதுக்கு இந்தப்படத்தை ரிலீஸ் பண்றீங்க?” என்று கேட்டதால் ஒரு நன்மை. பல தியேட்டர்களில் முன்தொகை கூட கேட்காமல் போகனை தள்ளிவிட்டிருக்கிறார்களாம்.
சினிமாவுக்கு வருவதே இளைஞர் கூட்டம்தான். தமிழகம் முழுக்க லத்தியடி வாங்கி ஒத்தடத்தில் கிடக்கும் அந்த இளைஞர் கூட்டம், “போகனா…? போலீசை வாழ்த்தும் போகனா? போ சொல்லு அப்படியே!” என்று வாட்ஸ் ஆப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அதிகமா ஷேர் பண்ணி ஆத்திரத்தை மூட்டாதீங்க தோழர்ஸ்…
https://www.youtube.com/watch?v=0_As0C3djYU