61 தியேட்டர்களில் அதிகாலை ஷோ! மாஸ் காட்டிய மணிரத்னம் படம்!

மலையிலிருந்து தள்ளிவிட்டாலும் சிலையாய்தான் விழுவார் போலிருக்கிறது சிம்பு. வெறிபிடித்த ரசிகர் கூட்டம் இருக்கும் வரை சிம்பு ஒற்றை ஆளாக நின்று தயாரிப்பாளர்களை கதற விடலாம். அப்படியொரு மாஸ் ஓப்பனிங் இன்று. அதற்கு காரணம் வெறும் சிம்பு மட்டுமல்ல, மணிரத்னம் என்கிற மந்திரச் சொல்லும்தான்.

இன்று திரைக்கு வந்திருக்கும் செக்கச் சிவந்த வானம் சுமார் 60 தியேட்டர்களில் அதிகாலை 5 மணி ஷோ போடப்பட்டது. எல்லா தியேட்டர்களும் ஹவுஸ்புல். டி.என்.பி.சி தேர்வு வைத்தால் கூட, ‘போங்கய்யா நீங்களும் உங்க பரீட்சையும்’ என்று 5 மணிக்கு எழ பிடிக்காதவர்கள் இந்த படத்திற்கு எப்படி திரளாக வந்தார்கள்? சிம்புவின் ரசிகர் கூட்டம்தான் அது என்று ஒரு புறம் கூவுகிறார்கள். இன்னொரு பக்கம், இந்தப்படத்தில் விஜய் சேதுபதியும்தான் இருக்கார். அவருக்கு ரசிகர்கள் இல்லையா? அவங்கள்லாம் ஐந்து மணிக்கு வரமாட்டாங்களா? என்றும் கூக்குரல் கேட்கிறது.

எது எப்படியோ? மணிரத்னம் மறு மூச்சு விட்டிருப்பார். கடந்த சில படங்களாகவே ஜனங்களை வச்சு செய்யும் மணி, இந்தப்படத்தை எந்த மாதிரி கொடுத்திருக்கிறார் என்பது பற்றிய தகவல் இன்னும் சில மணி நேரங்களில்தான் வெளியாகும். ஆனால் சோஷியல் மீடியாக்களில் தவழும் ஸ்டில்கள் அத்தனையும் உற்சாகத்தை கொட்டுகின்றன.

அந்த உற்சாகம் தியேட்டரை விட்டு வெளியேறும் போதும் இருந்தால், மணிரத்னத்தின் வானத்தில் ‘மார்னிங்’ மட்டும்தான்!

Read previous post:
Simtaangaran Lyric Video – Sarkar

https://www.youtube.com/watch?v=FsNdaw56xE0

Close