குழந்தை குட்டீஸ் என்ஜாய்! சந்தோஷப்படுத்தும் சங்கு சக்கரம்!
மை டியர் குட்டிசாத்தான் காலம் வந்தால், குழந்தைகளுக்கு மட்டுமல்ல… பெரியவர்களுக்கும் சிறகு முளைக்காதா என்ன? தமிழ்சினிமாவில் குழந்தைகளை கவரும் படங்கள் நிறைய உண்டு. விஜய், சிவகார்த்திகேயன் படங்கள் எல்லாமே அந்த வகைதான். ஆனால் குழந்தைகளோடு குழந்தைகளாக தவழ்ந்து மகிழ்கிற படங்கள் எப்போதாவதுதான் வரும். அது இப்போது வந்திருக்கிறது.
மாரீசன் இயக்கத்தில் இம்மாதம் 29 ந் தேதி வெளிவரும் ‘சங்கு சக்கரம்’ அந்த டைப் படம்தான். பேய் படங்களை பார்த்து பெரியவர்கள்தான் இப்போது அச்சப்பட்டு அலற வேண்டி இருக்கிறது. குழந்தைகள் யாரும் கண்ணை மூடிக் கொண்டு கலவரப்பட்டதாக தெரியவே இல்லை. இது பேய் படம். ஆனால் குழந்தையே பேயாக வந்தால் எப்படியொரு ரகளையாக இருக்கும்? இப்படத்தின் மைய இழையாக அதை வைத்திருக்கிறார் மாரீசன்.
சரி… சங்கு சக்கரம் படத்திற்கு தியேட்டர் வரவேற்பு எப்படி? தமிழகத்தில் சுமார் 200 தியேட்டர்களிலும் உலகம் முழுக்க சுமார் 600 தியேட்டர்களிலும் வெளியிடப்படுகிறது. விடுமுறையை குறி வைத்து வந்திருக்கிறது. என்ஜாய் குட்டீஸ்…