ஆளே வராத அதிகாலை ஷோ! இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை?
மொட்டையடிச்சவங்க எல்லாம் கட்டப்பாவும் இல்ல. முடி வளர்த்தவங்க எல்லாம் பாகுபலியும் இல்ல என்ற தத்துவத்தை நிரூபிக்கும் விதத்தில் அவ்வப்போது சில சம்பவங்கள் நிகழும். அப்படியொரு சம்பவமாகிவிட்டது ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மீதான அதி தீவிர நம்பிக்கை!
பொதுவாகவே ரஜினி, அஜீத், விஜய் போன்ற ஹீரோக்களின் படங்களுக்குதான் அதிகாலை ஸ்பெஷல் ஷோ போடுவார்கள். அந்த நேரத்திலும் அடித்துப்பிடித்துக் கொண்டு கூடுவார்கள் ரசிகர்கள். அந்த வழக்கத்தை முதன் முறையாக உடைத்து சாதனை படைத்த படம் ‘இருட்டறையில் முரட்டுக்குத்து’. இப்படி போட்டுத் தாக்கினாலும் சரி, தாக்கிப் போட்டாலும் சரி. சிலருக்குதான் முன்னுரிமை கொடுப்பார்கள் ரசிகர்கள். அந்த நம்பிக்கையில் ‘கோலமாவு கோகிலா’ படத்திற்கும் அதிகாலை ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நயன்தாரா யோகிபாபு வரும் ஒரு காதல் பாடலை மிலியன் கணக்கில் பார்த்து மிளர விட்டிருந்தார்கள் யு ட்யூப் ரசிகர்கள். இதையெல்லாம் மனதில் கொண்டுதான் இந்த ஓப்பனிங் கணக்கு.
ஆறு மணி, எட்டு மணி, ஒன்பது மணி என்று அடுத்தடுத்த கேப் விட்டு துவங்கி சென்னையில் சுமார் எட்டு தியேட்டர்களில் இந்த ஏற்பாடு நடந்தது. ஐயகோ… முடிவு ரொம்ப கொடூரம். 40 சேர்கள் ஃபுல் ஆவதே பெரும்பாடாக இருந்தது.
ஷகிலாவுக்கு கிடைச்ச மரியாதை கூட கோகிலாவுக்கு இல்லையே என்று நினைக்கும் போது கவலையாதான் இருக்கு!