அள்ளிக் கொடுத்த விஜய் சேதுபதி! மற்றவங்கள்லாம் எங்கேப்பா?

இயற்கை அன்னை தன் சுண்டு விரல் நகத்தால் ஒரு தட்டு தட்டினால் போதும். சிருங்காரமாவது? அகங்காரமாவது? எல்லாம் காலி. அதுவும் ஒரு நாட்டின் மீது கோபம் கொண்டால் அவள் காட்டுகிற சீற்றம், யாராலும் அடக்க முடியாத ஆக்ரோஷமாக இருக்கும். அப்படிதான் கடவுளின் தேசமான கேரளா தண்ணீர் சூழ்ந்து தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

ஆயிரக்கணக்கானோர் வீடிழந்துவிட்டார்கள். லட்சக்கணக்கானோர் முகாம்களில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் உயிர் பலி. வாழ்வாதாரத்தை தொலைத்துவிட்டு ஒரு பிஸ்கட் பாக்கெட் கிடைக்காதா என்று தவியாய் தவித்து வருகிறார்கள். குடிநீர் கூட பலருக்கு கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அண்டை மாநிலங்களும் தன் உதவிக்கரத்தை நீட்டினால்தான் கேரளா கரையேற முடியும்.

அரசு கை கொடுப்பது ஒரு புறம் இருந்தாலும், சினிமா கலைஞர்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் அல்லவா? தமிழ் சினிமாவிலிருந்து நீண்ட முதல் கரம், சூர்யா மற்றும் கார்த்தியினுடையது. 25 லட்சத்தை தங்கள் சார்பாக வழங்கினார்கள். நடிகர் விஷால் 10 லட்சம், பிரகாஷ் ராஜ் 10 லட்சம், என்று அவரவர் சூழ்நிலைக்கேற்ப பட்டியல் நீள்கிறது. இன்று நடிகர் விஜய் சேதுபதி 25 லட்சத்தை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.

இங்குதான் நமக்கு இன்னொரு கேள்வி எழுகிறது. விஜய்க்கு கேரளாவில் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. ஆனால் இந்த நிமிஷம் வரைக்கும் அவர் வாயே திறக்கவில்லை. அஜீத்திற்கு கேரளாவில் வெள்ளம் என்ற தகவல் சொல்லப்பட்டதா என்பதே புரியவில்லை. ரஜினி ஐந்து லட்சம் கொடுப்பதற்கே ஐந்து லட்சம் முறை யோசிக்கிறவர். அவர் யோசித்து முடிவதற்குள் கேரளாவில் வெள்ளம் வடிந்து, வெங்காயம் முளைத்துவிடும்.

கேரளாவை பிறப்பிடமாக கொண்ட, தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட இன்னும் பொட்டு பைசாவை கிள்ளி வைக்கவில்லை.

குறித்த நேரத்தில் போய் சேராத எதுவும் குப்பைக்குதான் போய் சேரும். அது பணமாக இருந்தாலென்ன? பண்டமாக இருந்தாலென்ன?

4 Comments
  1. Ssprema says

    Sir,bigboss arav movie announced with vijay srig director,but they hold that movie,for what is the reason?and oviya ,arav goes hotel,mall took separate selfie with fans,but that Bankok video girl looks like not oviya.what is going on with them?Iam diehard fan of oviya.I always thinking about her,that only i ask this doubt to u sir.if u can ,post one video about this issue sir.pls.

  2. Ssprema says

    Now a days oviya avoided media people,she didn’t say anything about relationship with bb winner,I can’t digest that innocent girl has living together life with that man.so pls clarify ,is it true?oviya and bb winner living together in OMR resort?will she go to do movie with him?

  3. James Vasanth says

    ஆமாம். நீ எவ்வளவு டா கொடுத்த??? சும்மா அடுத்தவனை குறை சொல்லுவதை நிறுத்து டா

    1. admin says

      ஆமாண்டா… நான்தானே கேரளாவுல படத்தை ஓட்டி கோடி கோடியா சம்பாதிக்கிறேன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ஆளே வராத அதிகாலை ஷோ! இதென்னடா கோகிலாவுக்கு வந்த சோதனை?

Close