எளிமையா நடிச்சிட்டார் எஸ்.ஜே.சூர்யா!

‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ படத்தை உருவாக்கியவர்கள் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாக்கும் ஒரு முழுமையான குடும்பப் படத்தை ‘ஒரு நாள் கூத்து’ மூலம் பிரபலமான நெல்சன் வெங்கடேசன் இயக்குகிறார்

கதையை தேர்வு செய்வதில் தனக்கென தனித்தன்மை திறமைகளைக் கொள்வது பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-ன் சிறப்பியல்பு. ‘மாயா’ மற்றும் ‘மாநகரம்’ ஆகிய படங்கள் மூலம் அதிகப்படியான பார்வையாளர்களைத் தன்னகத்தேக் கொண்டுள்ளனர் என்பதே அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. அவர்களின் மூன்றாவது படைப்பாக எஸ்.ஜே.சூர்யா மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் ‘மான்ஸ்டர்’ என்ற பெயரிடப்பட்ட படம் இன்னுமொரு எடுத்துக்காட்டாக விளங்கும்.

இப்படம் ஒரு முழுமையான குடும்பப் பொழுதுபோக்கான படமாக இருக்கும். ‘ஒரு நாள் கூத்து’ மூலம் துணிச்சலான இயக்குநர் என்று விமர்சிக்கப்பட்டு பாராட்டைப் பெற்ற நெல்சன் வெங்கடேசன் தான் இப்படத்தை இயக்குகிறார். இப்படம் எனது முந்தைய படமான ‘ஒரு நாள் கூத்து’ படத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது அதைவிட நிச்சயமாக வித்தியாசமாக இருக்கும். அதை பார்வையாளர்களும் உணர்வார்கள். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கும் படமென்பதால் அனைத்துத் தரப்பினரையும் கவரும் வகையில் இருக்கும்.

ஆரம்பத்தில் நான் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ்-க்கு வேறு ஒரு கதையைத்தான் கூறினேன். ஆனால், என் வீட்டில் நடந்த சம்பவம், என்னை அடிப்படையாகக் கொண்ட கதை மேலும், அது என்னை ஊக்குவித்ததால் இந்தக் கதை பிறந்தது. அதுதான் ‘மான்ஸ்டர்’. இதுபற்றி இதற்கு மேல் என்னால் கூற முடியாது.

அதன்பிறகு நாயகனைப் பற்றி யோசிக்க அவசியமே எழாமல் அவர் எஸ்.ஜே.சூர்யா தான் என்று முடிவாகியது. அவர் தனக்கான பாணியில், எளிமையாக நடித்து அனைவரையும் இதயத்திலும் இடம் பிடிக்கக்கூடியவர். அதுமட்டுமல்லாமல், முதல் காட்சியிலிருந்து கடைசி வரை அவர் தான் மிகவும் பொருத்தமாகவும் இருப்பார். நாயகி ப்ரியா பவானி ஷங்கரும் தனது கதாபாத்திரத்தின் ஆழத்தைப் புரிந்துக் கொண்டு தன்னால் இயன்ற அளவில் அதிகப்படியாக முயற்சி செய்திருக்கிறார். கருணாகரன் ‘ஒரு நாள் கூத்து’ படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அந்தக் கதாபாத்திரம் நிச்சயம் அனைவராலும் ரசிக்கப்படும்.

தொழில்நுட்பம் – இசை – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு – கோகுல் பெனாய், எடிட்டிங் – VJ சாபு ஜோசப், இணை எழுத்தாளர் – சங்கர் தாஸ், கலை – ஷங்கர் சிவா.

படம் வெளிவருவதற்கான வேலைகள் மும்முரமாக நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது. இசை வெளியீடு மற்றும் படத்தின் வெளியீடு ஆகியவை விரைவில் வெளியிடப்படும்.

MAKERS OF MAYA & MAANAGARAM BRING A COMPLETE FAMILY ENTERTAINER WITH SJ SURYAH’S MONSTER DIRETED BY NELSON VENKATESAN OF ORU NAAL KOOTHU FAME

The salient trait of Potential Studios is its unique ability to cherry-pick phenomenal tales and talents. This has been evident through films like Maaya and Maanagaram, that erased the linguistic barriers to reach a much wider audience. Their third production venture titled MONSTER, starring SJ Suryah and Priya Bhavani Shankar in lead roles, is going to be another example of this.

“Monster will be a complete family entertainer,” starts off filmmaker Nelson Venkatesan, whose maiden directorial venture- Oru Naal Koothu- had received critical acclaim. So how different is this film from his previous one? “The audience will definitely feel a difference in the premise and treatment of this film, compared to ONK. This is a complete ‘Kids-Centric film’, which will engross the audience across all age groups,” claims the director.

Talking about the inspiration behind MONSTER, Nelson says, “Initially, I had narrated other scripts to Potential Studios. However, an incident that happened in my house, inspired me me to craft a script based on it. That is what Monster is. I can’t reveal anything more about the context, as it will be a spoiler.”

While shedding light on the film’s star-cast, Nelson says, “SJ Suryah doesn’t need an analysis on his performance. He is a wizard with his own style, and his effortless performances have won all our hearts. He will be a perfect entertainer in Monster too, from the very first scene to the last. Priya Bhavani Shankar understood the depth of her character and was able to put more life into it. She has strived for the best in this movie. Karunakaran had appeared in a serious character in my previous film Oru Naal Koothu, but in Monster he will be tickling your funny bones.”

Sharing his experience working with Potential Studios, filmmaker Nelson says, “It’s a huge privilege for me as a director to work for such a production house, which lives up to its commitment of delivering good quality films. That has been its greatest USP and knowing this gave me an added sense of responsibility to deliver a noteworthy product.”

Monster has a technical crew comprising of Justin Prabhakaran (Music), Gokul Benoy (Cinematography), VJ Sabu Joseph (Editing), Sankar Dass (Co-writer) and Shankar Shiva (Art). The post-production work is in full swing now and the official announcement regarding the audio and worldwide theatrical release will be made shortly.

Read previous post:
வட நாட்டு தயாரிப்பாளரை வாழ வைக்கக் கிளம்பிய அஜீத்!

Close