கை கொடுக்கும் கை(?) கவ்வ வருது காங்கிரஸ்! கமல் மூவ் என்ன?

“கட்சி ஆரம்பிக்கணும்னா அதுக்கு எவ்வளவு செலவாகும்னு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்ல…” அண்மையில் தந்தி டிவி செய்தியாளர் ரங்கராஜ் பாண்டேவிடம் கமல் சொன்ன பதில்தான் இது. “அப்ப கட்சி செலவை வேற யாராவது ஏத்துகிட்டா ஆரம்பிச்சுருவீங்களா?” என்பது அடிஷனல் கேள்வி. “இல்லேன்னா தேசிய கட்சியில் இணைவீங்களா?” இது அடிஷனலுக்கும் அடிஷனல் கேள்வி. ஆனால் நடைபெறும் சூசக, சுவிசேஷ அழைப்புகள், கமல்ஹாசனுக்கு தேசிய அந்தஸ்துக்கு வழங்கப்படுவதற்கான முன்னோட்டமாக இருக்கும் போல தெரிகிறது.

யெஸ்… மோடி அரசின் மறைமுக அழைப்பை நைசாக தள்ளி வைத்த கமலுக்கு, காங்கிரஸ் தரப்பிலிருந்து அழைப்பு விடப்பட்டுள்ளதாம். இதன் அறிகுறிதான் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பு கமலின் அரசியல் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்த விஷயம். இதுபோக, ‘வேஷ்டி கட்டிய தமிழர் ஒருவர்தான் பிரதமர் ஆவார்’ என்று சில வருஷங்களுக்கு முன் ப.சிதம்பரத்தை புகழ்ந்து பேசி, ஜெயலலிதாவின் கோபத்தை சம்பாதித்தார் கமல். இதன் மூலம் ‘வேஷ்டி கிழி’ புகழ் சத்யமூர்த்தி பவன் மீது கமலுக்கு ஒரு ஈர்ப்பு இதற்கு முந்தைய காலத்தில் இருந்திருக்கலாம் என்றும் சந்தேகம் வருகிறது.

இந்த நேரத்தில் ராகுல்காந்தியே, ஒரு தூதரை அனுப்பி கமலிடம் பேசி வருகிறாராம். ஒருவேளை கமல் உடன் பட்டால் தமிழ்நாட்டில் காங்கிரசை வளர்க்கும் ராகுலின் கனவு கலர் கனவாக மாற்றம் பெறக் கூடும். அப்படியே கமல்ஹாசனுக்கு ராஜ்ய சபா எம்.பி. பதவி கொடுத்து டெல்லியில் முழங்க விட்டாலும் ஆச்சர்யமில்லை.

சுப்ரமணியசாமி, தமிழிசையெல்லாம் கூட்டு சேர்ந்து குதறுவதை பார்த்தால், கமலின் கால்கள் காங்கிரஸ் பங்களாவை நோக்கி நடக்க நினைக்கிறதோ என்னவோ?

Read previous post:
மாத்திரைக்குள் இருக்கு மனுஷனோட யாத்திரை! புரிய வைக்கும் ஔடதம்!

Close