கல்வி ட்ரஸ்ட்டில் கருப்பு பணத்தை மாற்றினாரா காமெடியன்? உதவி செய்த ஹீரோ யார்?
கோடம்பாக்கத்தில் காமெடியன்களின் கணக்கு இருக்கிறதே… அது கள்ளமில்லாத வெள்ளைக்கணக்கு என்று நினைத்தால், நீங்கள் ஏமாந்து போவீர்கள். ஹீரோக்களுக்காகவாவது ஒரே படம். அறுபது நாள் கால்ஷீட். ஒரு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம். ஆனால் இந்த காமெடியன்களுக்கு ஒரு படத்தில் அதிகபட்ச கால்ஷீட்டே பத்து நாட்களுக்கு மேல் இல்லை. எல்லா ஹீரோக்களுடனும் கூட்டணி போடும் இவர்கள் கூட்டிக் கழித்துப் பார்த்தால், முன்னணி ஹீரோக்களை விட அதிகம் சம்பாதிப்பார்கள்.
அப்படி சம்பாதித்து சம்பாதித்து கணக்கில் காட்டாமல் வைத்திருந்த சில பல கோடிகளை, பிரபல ஹீரோ ஒருவரின் கல்வி ட்ரஸ்ட் மூலம் வெள்ளையாக மாற்றிவிட்டாராம் அந்த இளம் காமெடியன். ஆள் பார்க்கதான் கிராமத்து லுக்! பேசி பேசி அந்த ஹீரோ மனசை கவிழ்த்து ரூபாயை மாற்றிட்டாரு பார்த்தீங்களா…? என்று கமுக்கமாக சிரிக்கிறது கோடம்பாக்கம்.
இப்படி தனது பணத்தை சேதாரமில்லாமல் காப்பாற்றிக் கொடுத்த ஹீரோவுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பொருட்டு, அவரது படத்தில் பாதி சம்பளத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம் அந்த சிக்கன எழுத்து சிரிப்பு நடிகர். யார் அந்த ஹீரோ? யார் அந்த காமெடியன்? என்றெல்லாம் கன்பியூஸ் ஆகிக் கிடக்கும் உள்ளங்கள், ஹீரோவின் அடுத்தப்பட அறிவிப்பு வரும்போது கவனித்தால் தானாக புரிந்துவிடும்.
கல்வி ட்ரஸ்ட் எதுக்கெல்லாம் உதவுது பாருங்க?
Soori