விஜய் படம்! சசிகுமார் திடுக்கிடும் விளக்கம்!
தோல்விப்பட இயக்குனராக இருந்தால் கூட, கதை சொல்ல வருகிறார் என்றால் முறையாக ‘முன் அனுமதி’ கொடுக்கும் பெரிய மனசுக்காரர் விஜய். அதிக எண்ணிக்கையில் முதல்பட இயக்குனர்களை அறிமுகப்படுத்திய டாப் ஹீரோ என்ற பெருமையும் விஜய்க்கே! செல்வாக்கில் அஜீத் டாப்பில் இருந்தாலும், கலெக்ஷனில் டாப்பில் இருப்பவர் விஜய்! (புதிய இயக்குனர்களை கிட்டவே சேர்ப்பதில்லை விக்ரம். பெரிய மனசுக்காரராச்சே?!)
இப்படி கோடம்பாக்கத்தின் குபேர மூலையில் இருக்கும் விஜய்க்கு கதை சொல்ல வேண்டும் என்கிற ஆசை யாருக்குதான் இருக்காது? பல காலமாகவே விஜய்யும் சசிகுமாரும் இணையவிருக்கிறார்கள் என்கிற தகவல் அவ்வப்போது எழும்… வந்த வேகத்திலேயே அது அடங்கியும் விடும். சொல்லப்போனால், சுப்ரமணியபுரம் என்ற சூப்பர் ஹிட் வந்த காலத்திலிருந்தே இந்த செய்தியும் வந்து கொண்டுதான் இருக்கிறது.
அண்மையில் சசிகுமாரை சந்தித்தபோது, இந்த விஜய் படம் குறித்து நேரடியாகவே கேள்வி எழுப்பினோம். விஜய்க்கு கதை சொன்னீங்களே… என்னாச்சு? எப்ப இருவரும் இணைந்து படம் பண்ணப் போறீங்க? இதுதான் கேள்வி. சற்றே அசடு வழிந்த சசிகுமார், நானும் அப்படி செய்திகள் வருவதை பார்க்குறேன். நிஜமா நான் அவருக்கு இன்னும் கதை சொல்லவே இல்ல. காலமும் நேரமும் அமைஞ்சா அது நடக்கும். அப்படியொரு சூழ்நிலை வந்தால் அந்தப்படத்தின் நான் நடிக்க மாட்டேன். வெறும் இயக்கம் மட்டும்தான் என்றார்.
அப்படின்னா ஏதோ ஒரு மூவ் நடக்குது. இல்லேன்னா… ஏன் இப்படியொரு பதில்?
https://youtu.be/FBwNKhVcwLM