ரஜினி ரஞ்சித் கதை! பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தனுஷ்!
இன்னும் ஜல்லிக்கட்டே ஆரம்பிக்கல. அதுக்குள்ள கொம்பு பிடிக்க கிளம்பிட்டானுங்க என்று ஆவேசப்படுகிற அளவுக்குதான் இருந்தது பா.ரஞ்சித்தின் புதுப்பட அறிவிப்புக்கு மும்பை ஏரியாவிலிருந்து வந்த ரியாக்ஷன். பிரபல தாதா ஹாஜி மஸ்தான் கதையை படமாக்கப் போகிறார்கள் என்று சந்தேகப்பட்ட அவரது வளர்ப்பு மகன் சுந்தர் சேகர் என்பவர் ரஜினிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் என் தந்தையை கடத்தல் காரராக காட்டினாலோ, அல்லது தரக்குறைவாக சித்தரித்தாலோ சட்டப்படி வழக்கு தொடர்வேன் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து இன்று தனது தரப்பு விளக்கத்தை தனது மேனேஜர் வினோத் மூலம் வெளியிட்டிருக்கிறார் தனுஷ். படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் என்பதால்தான் இவ்வளவு பரபரப்பான விளக்கம். இதுவே வேறு யாராவதாக இருந்தால், புண் புரையோடுகிற வரைக்கும் பொறுமையாக இருந்திருப்பார்கள். அப்புறம் விஷயம் கைமீறி போன பின் குய்யோ முய்யோ என்று கதறியிருப்பார்கள்.
தனுஷ் தரப்பில் கூறப்பட்டிருக்கும் விளக்கத்தில், “இந்தக் கதை திரு. ஹாஜி மஸ்தான் அவர்களை பற்றிய கதையல்ல. மும்பை பின்புலத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் வடித்த கற்பனை கதைதான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது எங்க முப்பாட்டன் கதை என்று வேறு யாராவது முளைக்காமலிருக்க வேண்டும்!
https://www.youtube.com/watch?v=SnxCP_VIf3M
ரஜினின்னா மிரட்டி பணம் பறிக்கலாம் என என்னும் சூழ்ச்சி கும்பல் . ஹாஜி மஸ்தானை வைத்து பல படங்கள் வந்து விட்டன . அப்போது எங்க போனீங்க .