அமலாபால் படத்திற்கு அமோக ஸ்கிரீன்கள்! எல்லாம் தனுஷ் போட்ட கணக்கு!
சினிமா என்பது வணிகம்தான். ஆனால் வணிகம் மட்டுமே சினிமா அல்ல என்று நம்புகிற சிலரால்தான் அவ்வப்போது மனசை தட்டிவிட்டு போகிற படங்களை எடுக்க முடிகிறது. அந்த வகையில் காக்கா முட்டை, விசாரணை, என்று தேசிய விருதை தட்டிப்பார்க்கிற அளவுக்கு படம் எடுத்து வரும் தனுஷ், அடுத்ததாக போட்டிருக்கும் ஸ்கெட்ச்தான் அம்மா கணக்கு! படத்தில் வரும் அம்மா போட்ட கணக்கு என்ன என்பதையெல்லாம் நாளைக்கு ரிலீஸ் ஆகப் போகும் படம் சொல்லும்.
ஆனால் தனுஷ் போட்ட கணக்குதான் உலகத்திற்கே விசித்திரம். கிளாமர் டால் என்று கல்யாணத்திற்கு முன்பும், பின்பும் (கூட) போற்றப்படும் அமலாப்பாலை ஒரு பெரிய குழந்தைக்கு அம்மாவாக நடிக்க வைத்த கணக்குதான் அது. முதலில் ஷாக் ஆன அமலா, அப்புறம் கதை கேட்டதும் ஒ.கே என்றாராம். ஒரே மாதிரி நடிக்க மாட்டேன். ஆனால் இந்த படத்தை மறக்க மாட்டேன் என்று பேட்டியளிக்கிற அளவுக்கு இந்த படத்தோடு ஒன்றிப் போயிருக்கும் அமலாவுக்கு, ஒரு சர்ப்ரைஸ்…
அமலாபால் விஜய்யுடன் சேர்ந்து நடித்த படத்திற்கு ஆயிரம் ஸ்கிரீன்கள் கூட கிடைத்திருக்கும். பெயின்ட் அமலாவாக இருந்தாலும், சுவர் விஜய்தானே? அதனால்தான் அத்தனை ஸ்கிரீன்கள். ஆனால் இந்த அம்மா கணக்கு படத்திற்கு வெறும் அமலாபாலை மட்டுமே நம்பி 200 ஸ்கிரீன்களை ஏற்பாடு செய்திருக்கிறார் தனுஷ்.
தேசிய விருது வரும்போது வரட்டும்… முதல்ல தனுஷ் கொடுத்திருக்கும் இந்த கவுரவ விருதுக்கு ஒரு ட்ரீட் வைம்மா கண்ணு!