இசை யாருங்க? மாறி மாறி ஏமாற்றிக் கொள்ளும் கவுதம்மேனன் தனுஷ்!

இந்திய சினிமா வரலாற்றில் முதன் முறையாக… என்று துணிச்சலாக ஜால்ரா அடிக்கலாம். அல்லது துணிச்சலாக பிரம்படி கொடுக்கலாம். எப்படியோ…? இன்று தனுஷும், கவுதமும் செய்தது ரசிகர்களை செம டென்ஷன் ஆக்கியிருக்கிறது. தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. இதில்தான் இசையமைப்பாளர் பெயரே இல்லை.

பொதுவாக இப்படி டீசரோ, முதல் லுக்கோ வரும்போது அப்படத்தின் டெக்னீஷியன்களின் பெயரை வெளியிடுவது வழக்கம். எல்லாருடைய பெயரையும் வெளியிட்டாக வேண்டும் என்கிற கட்டாயமெல்லாம் இல்லை. ஆனால் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் போன்ற முக்கியமானவர்களின் பெயர் வந்தே ஆக வேண்டும். ஆனால் இந்த டீசரில் இசையமைப்பாளர் பெயர் மிஸ்சிங்.

விசாரித்தால், செம காமெடி பண்ணுகிறார்கள் தனுஷ் தரப்பில். “இன்னும் எங்க சாருக்கே (தனுஷ்) யார் மியூசிக் டைரக்டர்னு சொல்லல. ஏ.ஆர்.ரஹ்மான்னு அவர் நினைச்சுகிட்டு இருக்கார்” என்றார்கள். என்னது? ஹீரோவுக்கே சொல்லலையா? இப்படியெல்லாம் விளக்கம் கொடுத்தா நாங்க நம்பணுமா? என்று ஆடிப் போயிருக்கிறது பிரஸ். விளக்க வேண்டிய கவுதம், சைலன்ட் மோடில் இருக்கிறார்.

யானையோட வெயிட்டே எட்டு கிலோதான்னு சொன்னாலும், நம்பறதுக்குதான் ரசிகர்கள் இருக்காங்களே… பின்னுங்க பிரதர்ஸ்…!

https://youtu.be/KL_L3PkqVfI

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘துருவங்கள் 16 ‘ படம் பாருங்கள்… லட்சாதிபதி ஆகுங்கள்!

Close