இமயம் போல உயர்ந்து நின்ற தனுஷ்! என்ன செய்தார் தெரியுமா?

இப்போது நாம் சொல்லப் போகும் செய்தி, தனுஷோ அவர் தரப்போ வெளியே கசிய விட்ட தகவல் அல்ல. சைலன்ட்டாக மிக மிக சைலன்ட்டாக இன்று நடந்திருக்கிறது. ஒரே ஒருவர் மூலமாக வெளியே கசிந்த விஷயம்தான் இது. ஒரு எலந்த பழத்தை கொடுத்துவிட்டு, பலாப்பழம் சைசுக்கு பப்ளிசிடி தேடும் உலகத்தில் தனுஷின் இந்த செயல்… சொல்ல வார்த்தைகள் இல்லை!

கடந்த சில வாரங்களுக்கு முன் பத்திரிகையாளர் ராஜீவ் காந்தி ‘கொலை விளையும் நிலம்’ என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படம் எடுத்திருந்தார். அதை விஜய் சேதுபதி உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் முன்னிலையில் வெளியிட்டிருந்தார். அந்த விழாவுக்கு வந்திருந்த பலரும், கண்ணோரத்தில் கசிந்தபடியே கிளம்பினார்கள். ஏனென்றால் படம் சொன்ன வறுமை அப்படி. வாழ்வாங்கு வாழ்ந்த தஞ்சை விவசாயிகளில் ஒரு சிலரின் குடும்பங்களில் நடந்த வேதனைகளை மட்டும் படமாக எடுத்து வந்திருந்தார் ராஜீவ்.

அந்த விழாவுக்கு சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவராக வந்திருந்தார் டைரக்டர் சுப்ரமணியன் சிவா. தான் ஆரம்ப காலத்தில் உரக் கம்பெனியில் வேலை செய்ததையும், அப்போது எப்படியெல்லாம் கம்பெனிக்காரர்கள் விவசாயிகளை ஏமாற்றுவார்கள் என்பதையும் புட்டு புட்டு வைத்த சிவா, இன்று வான் பொய்த்து விவசாயம் பொய்த்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் அவலத்தை உணர்ச்சிப் பெருக்கோடு எடுத்துரைத்தார்.

அதற்கப்புறம் அவர் செய்த வேலைதான் மிக பிரமாதமானது. தனது நண்பர் தனுஷின் கவனத்திற்கு இந்த ஆவணப்படத்தை எடுத்து சென்றார். படத்தை பார்த்த தனுஷ், அவங்களுக்கு ஏதாவது செய்யணும். அழைச்சுட்டு வாங்க என்று கூற, கடந்த பத்து நாட்களாக பெரு முயற்சி எடுத்து சுமார் 125 குடும்பங்களை தேர்வு செய்திருக்கிறார் சிவா. இன்று வரவழைக்கப்பட்ட அந்த குடும்பங்களின் கையில் தலா ஐம்பதாயிரம் வழங்கிய தனுஷ், இந்த 125 இன்னும் நீளும் என்று வாக்குறுதியும் கொடுத்திருக்கிறார்.

இந்த தகவலை ராஜீவ் காந்தியே தன் முக நூலில் குறிப்பிட்டிருக்கிறார். தஞ்சை மாவட்டத்தையே குற்றுயிரும் குலையுயிரும் ஆக்கிவிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மத்தியில், விவசாயிகளின் வறண்ட நாவில் மழைத்துளியாய் விழுந்திருக்கும் தனுஷ், வாழ்வாங்கு வாழட்டும்.

3 Comments
  1. rajii says

    rajini political game
    any way good done.congrats

  2. Prem says

    Yes, Due to Suchi Leaks, Dhanush’s image is all time low. And people didnt forget suchi leaks yet, and so for such image boost he is doing such things. Usual strategy from Rajini. But good thing is that, atleast the farmers are getting benefited.

  3. Rajesh says

    Very Good Dhanush & Family.
    Long Live your Family members.
    God Bless you and your Family

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எனக்கு பிடிக்காத சொல் வேலை நிறுத்தம்! ரஜினி ஓப்பன் சமரசம்!

Close