கீர்த்தி சுரேஷ் தனுஷ்! நிரந்தர (?) பிரிவு?
தமிழகத்தில் ‘நிரந்தர’ என்ற வார்த்தைக்குதான் நிரந்தர மரியாதை! அதேநேரத்தில் நிரந்த அலுப்பும் கூட! நிரந்தர முதலமைச்சர்… நிரந்தர பொதுச்செயலாளர்… என்று காதுக்கு பழகிப் போன அந்த வார்த்தையை திரும்பக் கேட்க நேர்ந்தால், “போதும்ப்பா போதும்” என்பார்கள் ஜனங்கள்!
ஜனங்கள் மட்டுமா, வேறொரு விஷயத்தில் ‘போதும்ப்பா போதும்’ ஆகிவிட்டாராம் கீர்த்தி சுரேஷ்! ஏன்?
‘தொடரி’ கலவரம்தான் காரணம். இவருக்கும் தனுஷுக்கும் படப்பிடிப்பு சமயத்தில் ஏகப்பட்ட சண்டை சச்சரவுகள். மனத்தாங்கல். இவருக்கும் அவருக்கும் எந்த விஷயத்திலும் ஒத்துப் போகவில்லையாம். எப்படியோ இருவரையும் வைத்து படத்தை நகர்த்திக் கொண்டிருந்த பிரபுசாலமனுக்கு நடுநடுவே இவர்கள் சண்டை போட்டுக் கொண்டதுடன், படப்பிடிப்புக்கு மட்டம் போட்ட கொடுமையும் நடக்க, எப்படியாவது இந்த ஜோடிகளை வச்சு படத்தை முடிச்சுட்டா போதும் என்கிற அளவுக்கு ஆகிவிட்டாராம்.
இனிமே ஜென்மத்துக்கும் சேர்ந்து நடிக்கக் கூடாது என்கிற எண்ணத்தோடுதான் பிரிந்தார்களாம் தனுஷும், கீர்த்தி சுரேஷூம். இப்படியொரு கொடுமை நடந்தது தெரியாமல், சமீபத்தில் கீர்த்தியிடம் பேசிக் கொண்டிருந்த ஒரு நிருபர் “உங்க ஜோடிப் பொருத்தம் அபாரம்” என்று புகழ, சிரிப்பதா, அழுவதா என்று புரியாமல் திகைத்தாராம் கீர்த்தி.
மேற்படி ஜோடியை சந்திக்க நேர்ந்தால், தொடரி ஜோடிப் பொருத்தம் பற்றி பேசாமலிருந்தால் ஒரு ஓசி காபி உத்திரவாதம். பேசினால், சுடுதண்ணீர் கூட கிடைக்காது மக்கழே…
To listen audio click below :-