விக்ரம் டென்ஷன்! துருவ நட்சத்திரம் ஷுட்டிங் நின்ற பின்னணி இதுதான்!
பண விஷயத்தில் பைனான்ஸ் கம்பெனியை விடவும் படுமோசமாக நடந்து கொள்வார் கவுதம் மேனன். அதே பண விஷயத்தில் கந்து வட்டிக் காரனை விட கொடூரமாக நடந்து கொள்வார் விக்ரம். இவ்விருவரும் இணையும் படம் நினைத்தபடி நடந்துவிடுமா? கோடம்பாக்கத்தின் சந்தேகத்தை குண்டு கட்டாக தூக்கி கொஞ்சியிருக்கிறது அண்மையில் நடந்த சம்பவங்கள். யெஸ்… துருவநட்சத்திரம் படத்தை பாதியிலேயே நிறுத்திவிட்டார் விக்ரம். அதே தாடி கெட்டப்பில் இருந்தால் கெஞ்சி கூத்தாடி படப்பிடிப்புக்கு அழைத்துச் சென்று விடுவார் என்பதால் க்ளீன் ஷேவ் செய்து கொண்டிருக்கிறார். இதனால் கவுதம் மேனன் படு படு அப்செட்!
பனிரெண்டு கோடி சம்பளம் கேட்டு, பத்து கோடி வாங்கிக் கொண்டிருக்கிறார் விக்ரம். கவுதம் மேனன் என்பதால் இன்னும் கூட குறைத்து வாங்கிக் கொள்ள சம்மதித்தாராம் அவர். ஆனால் பேசிய பணத்தை பைசா பாக்கியில்லாமல் கொடுத்துவிட வேண்டும் என்பது அக்ரிமென்ட். ஏனிந்த உஷார்? கவுதம் மேனனின் முந்தைய லட்சணம் அப்படி. சிம்புவுக்கு சம்பள பாக்கி, தனுஷுக்கு சம்பள பாக்கி, ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சம்பள பாக்கி, ஹாரிஸ் ஜெயராஜூக்கு சம்பள பாக்கி என்று ஆங்காங்கே மிச்சம் வைப்பார். இந்த ஒரு காரணத்தாலேயே பிரண்ட்ஷிப் மொத்தமாக கோவிந்தா ஆகிக் கொண்டிருந்தது.
இதையெல்லாம் கேள்விப்பட்ட விக்ரம், அதனால்தான் முதலிலேயே ஸ்ரிட்டு ஸ்ரிட்டு ஸ்ரிட்டு… என்று மூணாபுறமும் முகத்தை காட்டி எச்சரித்து வைத்திருந்தார். இவ்வளவு எச்சரித்திருந்தும் கடைசியில் தன் சுய பலனை காட்டியதால் வெறுத்துப் போன விக்ரம், படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டதாக கூறுகிறது கோடம்பாக்கம்.
கடந்த பத்து நாட்களாகவே அட்வான்ஸ் கொடுத்ததோட இருக்கு. அடுத்த பேமென்ட் வரல… வரல… என்று நினைவுபடுத்திக் கொண்டேயிருந்தாராம் விக்ரம். இவர் மேனேஜரும் அவர் மேனேஜரும் பேசிக் கொண்டிருந்தார்களே தவிர, சிங்கிள் பைசா இடம் மாறவில்லை. கடைசியில் தன் வேலையை காட்டிவிட்டார் விக்ரம் என்கிறார்கள்.
மிச்ச படத்தை முடிப்பதற்குள் இருவரும் எரி நட்சத்திரம் போல தீப்பற்றிக் கொள்ளாமலிருந்தால் சரி!
https://youtu.be/oBaZKkmVxzI