டைரக்டரை அழவிட்ட தமிழ்ராக்கர்ஸ்! இன்னும் எத்தனை பேரைடா கொல்லப்போறீங்க?

மாரீசன் இயக்கத்தில் ‘சங்கு சக்கரம்’ என்ற படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இங்குதான் தனது மன அழுத்தத்தை இறக்கி வைக்க முடியாமல் நா தழுதழுத்தார் ‘சென்னை டூ சிங்கப்பூர்’ படத்தின் இயக்குனர் அபாஸ் அக்பர்.

வெளியான தினமே தமிழ்ராக்கர்ஸ் திருட்டு இணையதளத்தில் படம் வந்துவிட்டது. அதிர்ச்சியடைந்த அபாஸ், “இந்தப்படத்துக்காக ஆறு வருஷமா உழைச்சுருக்கேன். எட்டு கோடி ரூபாய் இன்வெஸ்ட் பண்ணியிருக்கோம். அதை திரும்ப மீட்கணும்னா ஒரு மாத காலம் ஆகும். அதனால் தயவு பண்ணி ஒரு மாசம் கழிச்சு படத்தை உங்க தளத்துல வெளியிட்டுக்கங்க. ப்ளீஸ்” என்று கையெடுத்து கும்பிட்டார். இதையடுத்து தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்திலிருந்து படம் நீக்கப்பட்டது. ஆனால் அடுத்த ஒரு மணி நேரத்திலேயே அந்தப்படம் மீண்டும் வெளியிடப்பட்டது.

இதில் பயங்கர வேதைனைக்கு ஆளானார் அபாஸ். இந்த விழாவில் ஸ்பெஷல் கெஸ்ட்டாக அழைக்கப்பட்டிருந்தார். மைக்கை பிடித்தவர், அப்படியே நிலைகுலைந்து போனது பரிதாபத்திலும் பரிதாபம். “பெரிய நம்பிக்கையோடு சினிமாவுக்கு வர்றோம். எங்களோட இத்தனை வருஷ உழைப்பு, அர்ப்பணிப்பு எல்லாமே போச்சு. என்ன பண்றதுன்னே புரியல” என்று அப்படியே சில வினாடிகள் மவுனமாக இருந்தவர், கண்கலங்க மேடையை விட்டு இறங்கி அப்படியே அரங்கத்தை விட்டே வெளியேறினார்.

இன்னும் எத்தனை பேரின் வாழ்வையடா சூறையாடப் போறீங்க?

அபாயக் குறிப்பு- இன்று வெளியாகியிருக்கும் வேலைக்காரன், சக்கப்போடு போடுராஜா படம் இரண்டையும் இன்றே வெளியிடுவதாக விளம்பரப்படுத்தி இருக்கிறதாம் தமிழ்ராக்கர்ஸ். உன் தலையில் இடி விழ…

2 Comments
  1. Vimalan says

    வேலைக்காரன் honest விமர்ஷணம்: நாம சாப்படற பண்ணு பிஷகட்ல பெரிய corporate food Companies கலக்கின்ற கெமிக்கல்லசால சின்ன நாலு வயசு குழந்தை கான்செர் வந்து அநியாயமா இறக்க, சிவா பொங்கி எழும் நல்ல கதையை, documentary மாறி எடுத்து மோகன் ராஜா நம்மை படுத்தி விடுகிறார். நடிப்பில் பாஹத் பிஹாஸில் சிவாவை தூக்கி சாப்பிட்டுவிட்டது என்னவோ உண்மை தான். இரைச்சல் இசை மேலும் படுத்தியெடுத்தி விடுகிறது. சிவாவின் முதல் சறுக்கல்.

  2. SARATH says

    VALAIKKARAN BLOCKBUSTER MOVIE.
    MASS & CLASS HERO SIVAA.
    NEXT THALA THALAPATHI SIVAA

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உள் குத்து மீது விழுந்த ஊமை குத்து! ஆல் ரூட் கிளியர்! அத்தனை புகழும் விஷாலுக்கே!

அறம், அருவியை தொடர்ந்து தமிழ்சினிமாவின் அடுத்த பரபரப்பு ‘உள் குத்து’ படமாகதான் இருக்கும் என்கிறார்கள் இங்கே! முதல் இரண்டும் கமர்ஷியல் படமல்ல. ஆனால் கமர்ஷியலாகவும் ஹிட். ஆனால்...

Close