நான் சம்பாதிக்கறது எல்லாமே உங்களுக்குதான் சார்… நெகிழ வைத்த மிஷ்கின்

பொதுவாகவே மிஷ்கின் எந்த விழாவில் கலந்து கொண்டாலும், பேச்சு…உடல் மொழி உள்ளிட்ட எல்லாவற்றினாலும் எரிச்சல் மூட்டுவார். பரம பிதாவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவனே நான்தான் என்கிற திமிர் இருக்கும் அவரது பேச்சில். ஆனால் அடக்க ஒடுக்கமாக, அண்ணன் தம்பியாக, நெருக்கம் இருக்கமாக பேசிவிட்டு போன ஒரே நிகழ்ச்சி ‘விருமாண்டியும், சிவனாண்டியும்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவாக மட்டும்தான் இருக்க முடியும்.

அதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அப்படத்தின் இயக்குனர் வின்சென்ட் செல்வா, மிஷ்கினின் குருநாதர்.

யூத், பிரியமுடன் என்று விஜய்யை வைத்து படம் எடுத்தவர் என்ற குவாலிபிகேஷன் போதும், வின்சென்ட் செல்வாவின் புகழை சொல்ல. அவரிடம் யூத் பிரியமுடன் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மிஷ்கின்.

மிக மிக நெகிழ்ச்சியாக தனது பேச்சை ஆரம்பித்து, அதே நெகிழ்ச்சியோடு தன் உரையை முடித்தார் மிஷ்கின். “நான் அசிஸ்டென்ட் டைரக்டரா சேர்ந்த முதல் படத்திலேயே எனக்கு கோ-டைரக்டர்னு டைட்டில் போட்டவர் வின்சென்ட் செல்வா. என்னை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திய இரண்டாவது தயாகதான் நான் அவரை பார்க்கிறேன். நான் இன்னைக்கு ஓரளவுக்கு தெரிந்த டைரக்டரா இருக்கேன்னா அதுக்கு காரணம் அவர் எனக்கு கற்றுக் கொடுத்த விஷயங்கள்தான். பேசிக்கலா அவர் ஒரு கேமிராமேன். எனக்கு தெரிஞ்சு பாலு மகேந்திராவுக்கு அடுத்ததா அதிகமாக லென்ஸ்களை பற்றி தெரிந்து வைத்திருப்பவர்னு நான் இவரைதான் சொல்வேன்.

எவ்வளவோ உயரத்திற்கு வந்திருக்க வேண்டியவர். என்ன காரணத்தாலோ அது தள்ளிப் போய் கொண்டேயிருக்கு. நான் அவரைப்பற்றி எப்போதும் நினைச்சுகிட்டே இருப்பேன். எவ்வளவோ வலி இருக்கு. கவலைப்படாதீங்க சார். நான் சம்பாதிக்கறதெல்லாம் உங்களுக்குதான்” என்று சொல்லி அமர்ந்தார்.

அரங்கில் ஒரு கனத்த மவுனம் நிலவியது சில வினாடிகளுக்கு.

To listen audio click below :-

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
உதயநிதி ஸ்டாலின் – மஞ்சிமா மோகன் நடிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் 9

Close