ஜெயலலிதா சமாதியில் பார்த்திபன்! ஜீரணிக்க முடியலேம்மா…

நடிகர் பார்த்திபன், கலைஞர் கருணாநிதிக்கு அற்புதமான ஒரு விழாவை எடுத்து பாராட்டியவர். அவரே அசந்து போகிற அளவுக்கு ஆயிரக்கணக்கான புத்தங்களுடன் ஒரு நூலகத்தை அதே மேடையில் அமைத்துக் காட்டியவர். இருந்தாலும் அரசியலுக்கும் பார்த்திபனுக்குமான தூரம், அண்டார்டிகாவுக்கும் அமிஞ்சிக்கரைக்குமான தூரம்! இவரைப்போல அரசியல் சார்பற்றவர்களையும் கூட வாயடைத்துப் போக வைக்கும் நிலைமைதான் தற்போதைய தமிழகத்தின் அரசியல் சூச்சுவேஷன்.

சசிகலா தலைமையில் ஒரு கூட்டமும், ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு கூட்டமும் கூடி கும்மியடித்துக் கொண்டிருக்கிறார்கள். கவர்னர் யாரை ஆட்சி அமைக்க அழைப்பார் என்பதும் பெரிய புதிராக இருக்கும் நிலையில், இன்று காலை ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று சில நிமிடங்கள் அமைதியாக நின்ற வண்ணம் இருந்திருக்கிறார் டைரக்டர் பார்த்திபன். அவர் ஏன் அங்கே போனார்? அதை அவரே கூறியிருக்கிறார்.

முதன்முறையாக … மறைந்த
முதல்வர் சமாதிக்கு சென்றேன்.
தியானிக்க அல்ல, ஜீரணிக்க!

பார்த்திபனின் இந்த வரிகளுக்குள்தான் எத்தனையெத்தனை அர்த்தங்கள்!

https://youtu.be/-86QaGHWNrE

Read previous post:
BOBBY SIMHA-The Real Life Villain.

https://youtu.be/nLZOeHwyC9U

Close