விஜய் இப்படி பண்ணிட்டாரே? வெந்து தணியும் இயக்குனர்கள்! எல்லாமே நல்லதுக்குதான்!
ஜெயித்தவர்களின் முதுகில் ஏறி பயணம் செய்யவே விரும்புவார்கள் ஹீரோக்கள். அதுவும் விக்ரம் மாதிரியான சில ஹீரோக்கள், “நாங்க புது இயக்குனர்களுடன் சேர்ந்து வொர்க் பண்றதில்ல. ஸாரி…” என்று ஓப்பனாகவே சொல்லிவிட்டார்கள். தமிழ்சினிமாவின் தலையெழுத்து இப்படியிருக்க, தன் கேரியரில் ஏராளமான புது இயக்குனர்களை அறிமுகப்படுத்தியது மட்டுமல்ல, அவர்களை வெற்றிப்பட இயக்குனர்களாகவும் கொழிக்க வைத்தவர் விஜய்.
அப்படிப்பட்டவரிடமிருந்து திடீர் திடீரென அழைப்பு வந்தால் எப்படியிருக்கும்? ஊரிலிருக்கிற சாமிக்கெல்லாம் தேங்காய் உடைப்பு பிரார்த்தனையை கடன் வைத்துவிட்டு கிளம்பி ஓடுகிறார்கள் புது இயக்குனர்களில் பலர். போனால், ‘உடைபடுகிற தேங்காயே நீதான் தம்பி’ என்பது போல ஒரு விஷயத்தை சொல்கிறாராம் விஜய். அப்புறம்? போன வேகத்தில் எடுக்கிறார்கள் ஓட்டம். எல்லாம் அந்த நன்றிக்கடனால் வந்த வினை.
‘நாளைய தீர்ப்பு’ படத் தோல்விக்குப்பின், ஒரு பெரிய ஹீரோவுடன் சேர்ந்து நடித்தால்தான் சினிமாவில் ஒரு இடம் பிடிக்க முடியும் என்று நம்பிய எஸ்.ஏ.சி, தன் மகனை அழைத்துக் கொண்டு போனது விஜயகாந்திடம். “நான் எப்ப வரணும். எங்க வரணும். என்னைக்கு ஷுட்டிங்?” இதுதான் விஜயகாந்த் விஜய் அப்பாவிடம் சொன்ன பதில். அதற்கப்புறம் ‘செந்தூர பாண்டி’ என்ற படத்தில் விஜயகாந்துடன் நடித்து பட்டிதொட்டிக்கெல்லாம் அறிமுகம் ஆனார் விஜய். அந்த ஷுட்டிங் சமயத்தில் கூட, “தம்பிக்கு பைட் வைங்க. கதையை தம்பியை சுற்றியே வைங்க” என்று விஜய்யின் வளர்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்தார் விஜயகாந்த்.
அப்படிப்பட்டவரின் மகன் சண்முகபாண்டியன் இன்னும் ஒரு இடத்தை பிடிக்கலையே என்று நினைத்தாராம் விஜய். “நானே என் தயாரிப்பில் ஒரு படம் எடுக்கிறேன். அதில் சண்முக பாண்டியன்தான் ஹீரோ” என்று விஜயகாந்தை சந்தித்து வாக்கும் கொடுத்துவிட்டார். அதற்காக பணத்தை கொட்டிவிட்டு ஒதுங்கிவிடுவது சரியில்லை அல்லவா? தானே உட்கார்ந்து சண்முக பாண்டியனுக்கு தோதாக ஒரு கதையை தேடிக் கொண்டிருக்கிறார்.
அதற்காகதான் இந்த இயக்குனர்களை அழைக்கிறாராம்.
கதை விஜய்க்கு அல்ல, விஜயகாந்தின் மகனுக்கு என்றதுமே… விளக்கெண்ணையை ‘ராவா’ குடிச்ச எபெக்டுடன் திரும்புகிறார்களாம் அந்த இயக்குனர்கள்.
தாடி வச்சவங்கள்லாம் ஏசப்பா இல்லங்கற உண்மை கொஞ்சம் கசக்கத்தான் செய்யும். அதற்காக தடுக்கி விழுந்தாலும் ஏசப்பா மேலதான் விழுவேங்கறது அராஜகம்யா!
தவறாக எடுத்துக்கொள்ளவில்லை எனில் எங்கே யாரை தொடர்புக்கொள்வது என சொல்லுங்கள் சார்