நழுவிய பொன்வண்ணன்! நழுவாமல் நிறுத்தப்பட்ட கார்த்தி! நடிகர் சங்கத்தில் பூகம்பம்!

ஆர்.கே.நகரில் ஒரே ஒரு பால்தான் போட்டார். பதிலுக்கு தினந்தோறும் ஒரு செங்கல் விழுந்து கொண்டிருக்கிறது விஷாலின் தலையில். தயாரிப்பாளர் சங்கம் மட்டுமல்ல, நடிகர் சங்கத்திலும் இப்போ பூகம்பம்.

உப தலைவர் பொன்வண்ணன் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதற்கு அவர் காரணமாக சொல்லியிருப்பது விஷாலின் அரசியல் ஆசையைதான். எப்போது ஆர்.கே.நகருக்கு விஷால் மனுத்தாக்கல் செய்தாரோ, அன்றே தனது ராஜினாமா கடிதத்தை சங்கத்தின் தலைவர் நாசரிடம் கொடுத்துவிட்டாராம் அவர். ஆனால் எப்படியாவது அவரை சமாதானப்படுத்தி பணியில் தொடர வைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தார்கள். ஐயகோ… எல்லாம் கைமீறிப் போய்விட்டது.

இதற்கிடையில் சங்கப் பொருளாளர் கார்த்தியும் சங்கத்தை கைகழுவப் போகிறார் என்றொரு தகவல் கசிய, அவரையும் மடக்கிப் போடும் வேலை ஜரூராக நடந்தது. நல்லவேளை…. நிலைமையை புரிந்து கொண்ட கார்த்தி, விஷாலுக்கு ஆறுதல் அளித்திருக்கிறார்.

‘சங்க கட்டிடத்தை கட்றோம். அங்கே விஷாலுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறோம்’ என்று கார்த்தியே தனது கைப்பட ஒரு ட்விட் போட… எல்லாம் சுபம்!

இன்னும் யாரெல்லாம் கல் வீச நினைக்கிறீங்களோ, ஒத்தாப்ல நின்னு ஒரே டைம்ல போட்ருங்கப்பா. அவரு அடுத்த வேலைய பார்க்க போவணும்!

https://youtu.be/3DU5GlzvE98

1 Comment
  1. Subban says

    Strange thing is Actor Sivakuamr’s family supports this selfish Power Crazy Fake Vishal (PCFV). Vishal’s intentions now became clear that only succeeding power in many organizations, now MLA seat for his selfish intentions.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
முறையான முன் அறிவிப்பு இல்லை! அல்லாடும் ரஜினி ரசிகர்கள்!

இன்று ரஜினிக்கு பிறந்த நாள். மற்றவர்களுக்கு இது ஒரு டே... அவ்வளவுதான். ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு இது அவரவர் பிறந்த நாளை விட பிரமாதமான நாள்! ‘தலைவா......

Close