முறையான முன் அறிவிப்பு இல்லை! அல்லாடும் ரஜினி ரசிகர்கள்!
இன்று ரஜினிக்கு பிறந்த நாள். மற்றவர்களுக்கு இது ஒரு டே… அவ்வளவுதான். ஆனால் ரஜினி ரசிகர்களுக்கு இது அவரவர் பிறந்த நாளை விட பிரமாதமான நாள்! ‘தலைவா… கட்சி துவங்கு’. ‘தலைவா… தமிழ்நாடு உன்னைதான் நம்பியிருக்கு’. போன்ற போஸ்டர்களை சொந்த செலவில் அச்சிட்டு மகிழும் அவர்களுக்கு, இந்த முறையும் பொங்கல் புளியோதரைதான் பிரசாதம்!
இன்று தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்று கடந்த சில மாதங்களாகவே ஓதிக் கொண்டிருந்த மீடியாக்கள் அடுத்து எதை புதுசாக சொல்வது என்று மண்டையை பிய்த்துக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் இந்த முறை சற்றே புதிய விஷயம் ஒன்றை செய்துவிட்டார் தலைவர்.
எப்போதுமே பிறந்த நாளுக்கு முதல் நாள் அவரிடமிருந்து ஒரு அறிவிப்பு வரும். நான் ஊரில் இல்லை. அதனால் என் ரசிகர்கள் யாரும் சென்னை வந்து சிரமப்பட வேண்டாம் என்று. ஆனால் நேற்று அப்படியொரு அறிக்கை வரவில்லை. மாலை நாளிதழ்கள் பலவற்றில் ஒரே ரஜினி பிறந்த நாள் வாழ்த்து மழைதான். இன்று தலைவர் தரிசனம் நிச்சயம் என்று சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டார்கள் ரசிகர்கள்.
இன்று காலையிலிருந்தே போயஸ் கார்டன் திமு திமு வானது. ஆனால் ரஜினி வீட்டில் இருக்கிறாரா, இல்லையா? வெளியே வருவாரா, வரமாட்டாரா? என்கிற தகவல் யாருக்கும் சொல்லப்படவில்லை. அவர் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கட்சி கண்றாவியெல்லாம் இருக்கட்டும்… முதல்ல தலைவர் முகத்தை பார்ப்போம் என்று சென்னைக்கு மெனக்கட்டு வந்த பலரும், இன்னும் காத்திருக்கிறார்கள்.
நம்பிக்கையோடு காத்திருப்பதுதான் அவர்களுக்கு ஒன்றும் புதுசு இல்லையே? தலைவா… ஒண்ணும் அவசரம் இல்ல. புளியோதரை காய்ந்தாலும் பிரசாதம் பிரசாதம்தான்!
https://youtu.be/-jsCFk7VS1w
OUR BELOVED SUPER STAR GOD RAJINI WILL BECOME THE NEXT CHIEF MINISTER OF TAMIL NADU