ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல?

‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ என்னும் வார்த்தையை கேட்டிராதவதர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. அதற்கு காரணம் பெற்றோர்கள். இப்படி சிறுவயதிலிருந்தே நம் வாழ்க்கையோடு ஒட்டிக்கொண்டு பயணிக்கும் அந்த வார்த்தையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது தான், இசையமைப்பாளர் – பாடகர் ரெஹானா ‘யோகி & பார்ட்னர்ஸ்’ சார்பில் தயாரித்து வரும் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படம் . அறிமுக இயக்குனர் வி. விக்னேஷ் கார்த்திக் கதை எழுதி இயக்கும் இந்த ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தில் புதுமுகம் அசார் மற்றும் ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, யோகி பாபு, மன்சூர் அலி கான், ‘வழக்கு என் 18/9’ புகழ் முத்துராமன், உமா பத்மநாபன், ‘இருக்கு ஆனா இல்ல’ புகழ் ஏதேன், சிங்கப்பூர் தீபன், விஜய் டிவி ராமர், டாக்டர் ஷர்மிலி மற்றும் விஜய் டிவி அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ரசிகர்களுக்கு சிறந்ததொரு பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரெஹானா, படத்தொகுப்பாளராக பிரேம் குமார் (குற்றம் கடிதல்), ஒளிப்பதிவாளராக வம்ஷிதரன், கலை இயக்குனராக முருகன் (கெத்து, மான் கராத்தே) மற்றும் நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் ஆகியோர் பணியாற்றி இருப்பது படத்திற்கு கூடுதல் பலம். அதுமட்டுமின்றி ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ படத்தில் அபே மற்றும் சைந்தவி ஆகியோர் பாடல் பாடியிருப்பது மேலும் சிறப்பு.

“தலைக்கு எண்ணெய் வைக்காததால், கதாநாயகன் ஒரு பிரச்சனையில் மாட்டி கொள்கிறார். என்ன அந்த பிரச்சனை? அதில் இருந்து எப்படி கதாநாயகன் தப்பிக்கிறார் என்பது தான் ‘ஏன்டா தலைல எண்ணெய் வெக்கல’ திரைப்படத்தின் ஒரு வரிக் கதை. படத்தின் இரண்டாம் பாதியில் வரும் காட்சிகள் அனைத்துமே தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதுமையான காட்சிகளாக இருக்கும். என்று கூறுகிறார் இயக்குனர் வி. விக்னேஷ் கார்த்திக்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Kannada Film Festival Inauguration Stills Gallery

Close