லவ் ஜோடிக்கு நடுவே ஒரு டாக்டர்! நடந்தது என்ன?
கோடம்பாக்கத்தில் டூப் லைட் என்றொரு படம் தயாராகி வருகிறது. (பின்னாளில் வரிவிலக்கு வேண்டி இதை எப்படி தமிழ் படுத்துவார்களோ? அந்த ஈசனுக்கே வெளிச்சம்)
” எங்கள் படத்தின் தலைப்பானது வெறும் கதையோடு மட்டும் பயணிக்காமல், கதாப்பாத்திரத்தோடும் ஒட்டி இருக்க வேண்டும் என்று நாங்கள் கருதினோம். அந்த தேடலின் முடிவில் நாங்கள் தேர்ந்தெடுத்த தலைப்பு தான் ‘டூப்லைட்’. அதுமட்டுமின்றி பாலிவுட் மாச்சோ – மேன் சல்மான் கான் அவர்களும் அவரின் புதிய படத்திற்கு இந்த ‘டூப்லைட்’ என்னும் தலைப்பை தான் வைக்க இருக்கிறார்.. இப்படி எங்கள் இருவரின் ரசனைகளும் ஒரே பாதையில் பயணிக்கிறது என்பதை நினைக்கும் போது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது…” என்கிறார் இப்படத்தின் இயக்குனர் இந்த்ரா.
“சராசரி கோட்டுக்கு கீழ் இருக்கும் ஒரு ஆண், தன்னை விட அழகும் அறிவும் அதிகமாக இருக்கும் பெண்ணை காதலிக்க, அவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் உள்ளே புகுந்து காய் நகர்த்துகிறார் ஒரு டாக்டர். அது எங்கே போய் முடிகிறது என்பது தான் எங்கள் ‘டூப்லைட்’ படத்தின் ஒரு வரிக் கதை. இது ஒரு பிளாஷ் பேக் படம் என்பதால் எங்களுக்கு படப்பிடிப்பு சற்று கடினமாக தான் இருந்தது…. இந்த படத்தில் வலுவான கதாப்பாத்திரத்தில் நடித்த பாண்டிய ராஜ் சாருடன் இணைந்து பணிபுரிந்தது எனக்கு பல சிறப்பான அனுபவங்களை கற்று தந்திருக்கிறது. நிச்சயமாக ரசிகர்களின் எல்லா எதிர்பார்ப்புகளையும் எங்களின் டூப்லைட் திரைப்படம் முழுமையாக பூர்த்தி செய்யும் என பெரிதும் நம்புகிறேன்…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘டூப்லைட்’ படத்தின் இயக்குனரும் – கதாநாயகனுமான இந்த்ரா. காதல் கலந்த காமெடி திரைப்படமாக உருவாகி வரும் இந்த ‘டூப்லைட்’ படத்தில் தியா கதாநாயகியாக நடிக்க பிரவீன் பிரேம் என்பவர் நடித்திருக்கிறார்.