பிரபல இயக்குனரை அலறவிட்ட சிம்பு! ஓ… இப்படியெல்லாம் கூட இருப்பாங்களா?
கடைவாய் பல் உடைந்தாலும் பரவாயில்ல. தமிழன்டா… ங்கிற வார்த்தையை எவ்வளவு அழுத்திச் சொல்றோமோ, அந்தளவுக்கு கைதட்டல் நிச்சயம் என்பதால், மூச்சுக்கு மூன்னூறு தடவை தமிழன்டா… தமிழன்டா… என்று முழங்கி வரும் டி.ஆர், தன் மகன் சிம்புவின் பட விஷயத்தில் மட்டும் இயக்குவது, தயாரித்து நடிக்க வைப்பதெல்லாம் ‘எவனா இருந்தா எனக்கென்ன?’ பாலிஸிக்கு போய்விடுவார். இல்லையென்றால் மலையாளி கவுதம் மேனன் படத்தில் நடிப்பாரா சிம்பு? அல்லது கேரள குயின் நயன்தாராவைதான் ‘முழுசார’ காதலித்திருப்பாரா?
போகட்டும்… தமிழன் என்று சொல்வதே வியாபாரம் என்று ஆனபின்பு இதெல்லாம் ச்சும்மா விவகாரம்! தற்போது நாம் சொல்ல வருவதும் கிட்டதட்ட கேரளம் சார்ந்த விஷயம்தான். மலையாளத்தில் நிவின்பாலி என்ற நடிகரை இன்று பெரிய அந்தஸ்திற்கு கொண்டு வந்த பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு சிம்புவை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது வெகுநாள் ஆசை. ஆனால் இவரைப்பற்றி கேள்விப்படுகிற எல்லாமே, ‘செத்தாண்டா சேகரு…’ டைப்பாகவே இருப்பதால், தயங்கிக்கொண்டே இருந்தாராம். ஒரு நாள் மனதை கல்லாக்கிக் கொண்டு சிம்புவை சந்தித்தும் விட்டார்.
“நான் உங்களை வச்சு படம் பண்ண ஆசைப்படுறேன். ஆனால் நீங்க என் விஷயத்தில் எதிலும் தலையிடாமலிருந்தால் அது நடக்கும்” என்று கேட்க, “நமக்கு அப்படியெல்லாம் இருந்து பழக்கமில்லீங்களே…” என்றாராம் சிம்பு. அதுமட்டுமல்ல… “பாடல் ட்யூன்லேர்ந்து படத்தின் டிசைன் வரைக்கும் என் பார்வைக்கு வராமல் நீங்க ஓ.கே பண்ணக் கூடாதாச்சே…” என்றும் கூற, முட்டை பரோட்டாவை கிளறுனா முதலை பீஸ் கிடக்கே என்று அஞ்சி நடுங்கினாராம் அல்போன்ஸ்!
“நல்லவேளை… படம் துவங்கறதுக்கு முன்னாடியே நான் கிளியர் பண்ணிகிட்டேன். இல்லேன்னா உங்களுக்கும் கஷ்டம். எனக்கும் கஷ்டமாகியிருக்கும். எனிவே… இந்த சந்திப்புக்கு நேரம் கொடுத்தமைக்கு நன்றி” என்று கையெடுத்து கும்பிட்டுவிட்டு விட்டு எடுத்தார் ஓட்டம்!
யாருகிட்ட வந்து?
https://youtu.be/WVZFWuSf3Fw