ரஜினிகாந்த் ஜனாதிபதி! லதா ரஜினிகாந்த் கவர்னர்! இன்னும் மிச்சம் மீதியிருக்கா?
ஒரே ஒரு சுவிட்ச் அவுட்டானால் கூட பரவாயில்லை. ஜெயலலிதா என்கிற அனல் மின் நிலையத்தையே மூடிவிட்ட பிறகு ஆளாளுக்கு தங்களின் இருட்டு முகத்தை காட்டி மிரட்டுவார்கள் போலிருக்கிறது. தமிழகத் தலைமை மீது துளி அச்சமும் இன்றி தன் வேலையை காட்ட ஆரம்பித்திருக்கிறது பா.ஜ.க.
தமிழகம் சார்ந்த பிரச்சனைகள் எதையும் தீர்த்து வைப்பதாகவும் இல்லை. வெந்த புண்ணில் விரலை விட்டு இம்சிக்கிற போக்கும் சர்வசாதாரணமாகிவிட்டது இப்போது. இந்த நிலையில்தான் எப்படியாவது தமிழகத்தில் காலூன்றி விட வேண்டும் என்கிற அக்கட்சியின் போக்கு, வயிற்றுப் போக்கை வரவழைக்கிற அளவுக்கு விதவிதமான ஐடியாக்களை உருவாக்கி சிரிப்பு மூட்டுகிறது. அதில் ஒன்று… ரஜினி ஜனாதிபதியாகப் போகிறார் என்பது. இன்று காலையிலிருந்தே ஊடகங்களில் வெளியாகும் இந்த வதந்திகள் உண்மையாகிவிட்டால் ஒன்றும் ஆச்சர்யமில்லைதான். இந்திய ஜனாதிபதி இவருதான் என்று உலக நாடுகளில் எந்திரன் படத்தை வெளியிட்டு கிடுகிடுக்க வைக்கிற சந்தர்பங்கள் அமைந்தாலும் அமையக் கூடும்.
ஆனால் ஜனாதிபதி வேட்பாளருக்கு உரிய அரசியல் ஞானம் ரஜினிக்கு இருக்கிறதா என்ற கேள்வியை இதே இந்தியாவின் மற்ற கட்சிகள் கேட்குமல்லவா? இதையாவது பொறுத்துக் கொள்ளலாம். இன்னொரு செய்தியும் கூடவே உலா வர ஆரம்பித்திருக்கிறது.
ஒருவேளை ரஜினி ஜனாதிபதி பதவிக்கு ஆசைப்படாவிட்டால், தமிழக பா.ஜ.க தலைமையாவது ஏற்க வேண்டும் என்கிற வற்புறுத்தல் தொடர்கிறதாம். அங்குதான் ஒரு இக்கு!
ரஜினி தமிழக பா.ஜ.க தலைமையை ஏற்க வேண்டும் என்றால், அவரது மனைவி லதாவுக்கு கவர்னர் பதவி தர வேண்டும் என்கிற நிபந்தனை பா.ஜ.க மேலிடத்திற்கு வைக்கப்படுவதாக இன்னொரு வதந்தியும் கிளம்பியிருக்கிறது.
மாணிக்கம் பாட்ஷாவாகலாம். ரசிக்கிறோம். அதுக்காக மிசஸ் மாணிக்கமும் பாட்ஷாவாக முடியும்னா சத்தியமா மிடியல சாமீய்…!
https://youtu.be/3vU5_dwF4aw
பதவி கொடுத்தாலும் அவர் பெறபோவதுயில்லை….அதுகுள்ள உங்ன்களுக்கு ஏன் இந்த வயித்தெரிச்சல்
உங்கள் கற்பனை வளத்துக்கு ஒரு அளவு கிடையாதா ???
சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் எந்த பதவிக்கு ஆசைப்பட்டவர் அல்ல. அதற்கு உதாரணம் 1996 -ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு தமிழக அரியணை காத்து கொண்டு இருந்தது. தமிழக மக்களும் அவர் தான் முதல்வர் என்று நம்பி இருந்தனர். அப்படி பட்ட சூழ்நிலையில் அவர் தனக்கு முதல்வர் பதவி வேண்டாம் என்று உதறி தள்ளியவர்.