பிடிவாத சரத்! விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ?

படுபயங்கர ஹேப்பி மூடில் இருக்கிறார் விஷால். ‘இரும்புத்திரை’ வெற்றிதான் காரணம் என்றாலும், இந்த ஹேப்பிக்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. அது நடிகர் சங்க கட்டிடத்தின் வளர்ச்சி. முதல் மாடி வரைக்கும் வளர்ந்து நிற்கிறது கட்டிடம். அங்கு நடக்கப் போகும் முதல் நிகழ்ச்சியே வரலட்சுமி விஷால் திருமணம்தான். ஆனால் அப்பா நாட்டாமை இன்னும் அதே கோபத்தோடு இருக்கிறாரே? இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடக்குமா?

இந்த கேள்வி விஷால் மனசிலும் இருக்கிறது. பெற்றோர் ஆசிர்வாதத்துடன் இதை நடத்திவிட வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாகவும் இருக்கிறது. அதற்காக என்ன செய்து வருகிறார் விஷால்?

தனது கலையுலக குருநாதர் அர்ஜுனைதான் நம்பியிருக்கிறாராம். விஷாலுக்காக பலமுறை சரத்குமாரை சந்தித்து பேசி வருகிறவரும் அர்ஜுன்தான். இறுகிய பாறாங்கல்லாக இருக்கும் எதிர்முனையை ஆக்ஷன் கிங்கின் அணுகுமுறை மாற்றுமா? அல்லது ஆளை விடுங்கப்பா என்று இவரையே ஓட விடுமா? இரும்புத்திரை கிளைமாக்சை விடவும் படு சூடாக இருக்கிறது இந்த பஞ்சாயத்து!

1 Comment
  1. unmai says

    Who will give his daughter if someone have a 70 Cr. Debt?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சென்சார் செய்த பிறகும் காலாவை சென்சார் செய்த ரஜினி!

https://www.youtube.com/watch?v=vhHjFvvXaUI

Close