அமீர்கானும் அஜீத்தும் ஒண்ணு! பிரபல நடிகை ஓவர் வழிசல்!
இந்தியில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள படம் தங்கல். தமிழில் புத்தம் புதுசாக வெளியான படங்களின் வசூலும், இந்த தங்கல் படத்தினால் அவுட். பல இடங்களில் புதிய படங்களை நீக்கிவிட்டு தங்கல் படத்தை வெளியிட்டுவிட்டார்கள் தியேட்டர்காரர்கள். இப்படியொரு அதிர்வலையை ஏற்படுத்திய படத்தை தமிழில் நேரடியாக எடுத்தால் அதில் யார் நடிப்பது பொருத்தமாக இருக்கும்? இப்படியொரு கேள்வி சமூக வலைதளத்தில் எழ, அவருதான்… இவருதான்… என்று பெரிய அடிதடியே நடந்து வருகிறது.
ஆனால் பாம்பின் கால் பாம்பறிவதுதானே முறை? ஒரு விஷயத்தை அதே துறையிலிருக்கிறவர்கள் அலசினால்தானே சரியாக இருக்கும்? இந்த கேள்விக்கு சரியான பதிலளித்து பாண்டியன் சபையில் பதினாறாயிரம் பொற்காசுகளை பெற்ற சந்தோஷத்திலிருக்கிறார் நீது சந்திரா. தமிழில் ‘ஆதிபகவன்’ என்ற படத்தில் நடித்த அனுபவமும் இருக்கிறது இந்த மும்பை மோகினிக்கு.
இவர்தான் அமீர் கான் வேடத்தில் நடிக்க பொருத்தமானவர் அஜீத் என்று கூறியிருக்கிறார். ஏன் என்று கேட்டதற்கு, அஜீத் ஒரு ஸ்போர்ட்ஸ்மேன். இந்த மாதிரி ஸ்போர்ட்ஸ் மேன்களால்தான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து நடிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
தங்கல் மாதிரியான படங்களை ரீமேக் செய்கிற அபாயம் கற்பனையாகவே இருந்துவிட்டு போகட்டும். ஆனால் அதில் அஜீத் என்பது மட்டும் இனிப்பான யோசனைதான்!
mr andhanan. ne oru ajith fan enbadhu theriyum. bt ajithku jalra adikkiradha konjam kuraithal nalladhu. mudiyalada dai..