சர்கார் படத்தோடு மோதுவது ஏன்? விஜய் ஆன்ட்டனி விளக்கம்!

ஆக்ஷன் முகத்தில் ஆயிரம் கேள்விக்குறிகளை மாட்டிக் கொண்டு அலையாமல், நிதானமாக இருக்கிறார் விஜய் ஆன்ட்டனி. ‘கடந்த ரெண்டு படங்கள் சரியா போகல’ என்று சொல்வதற்கே ஒரு தில் வேண்டுமல்லவா? அது இருக்கிறது அவரிடம். ‘எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துடணும். அதுதான் என் நோக்கம். அதற்கேற்ற மாதிரி ஒரு கதையை வந்து டைரக்டர் கணேஷா சொன்னதும் படக்கென்று ஓகே சொல்லிவிட்டேன்’ என்றார்.

கோடம்பாக்கத்தின் குறைந்தபட்ச உத்தரவாதம் உள்ள கதைகள் என்றால், அதில் போலீஸ் கதைகளுக்குதான் முதலிடம் கொடுக்க வேண்டும். காக்கி சட்டையை போட்டு முறுக்கிக் கொண்டு எவர் வந்து நின்றாலும், அடிவயிற்றிலிருந்து விசிலடிக்க தயாராக இருக்கிறான் ரசிகன். அந்த அடிப்படையில் இந்தப்படத்தில் டிஷ்யூம்களுக்கு பஞ்சமில்லை. சுவாரஸ்யத்துக்கும்தான்!

நிவேதா பெத்துராஜ் ஒரு லஞ்சப் போலீஸ். ஆனால், ‘போட்ட கோடு போட்டதுதான். அதை தாண்டி மில்லி மீட்டர் கூட ஸ்டெப் வைக்க மாட்டேன்’ என்கிற கண்ணிய போலீஸ் விஜய் ஆன்ட்டனி. இருவரும் ஒரே ஸ்டேஷனில். அங்கு நடக்கும் அத்துமீறல்களும், அடிதடியும்தான் கதை(யாக இருக்க வேண்டும்)

‘காதல் இல்லாத கதாநாயகி போர்ஷன் எனக்குதான் போல’ என்று பேச ஆரம்பித்தார் நிவேதா பெத்துராஜ். கதை சொல்ல வரும்போதே, புல்லட் ஓட்ட கத்துக்கங்க என்று கூறினாராம் கணேஷா. எப்படியோ கஷ்டப்பட்டுக் கொண்டு ஸ்பாட்டுக்கு வந்தால், ‘முதல்ல என்னை வச்சு டபுள்ஸ் அடிங்க. அப்புறம்தான் உங்க பின்னாடி விஜய் ஆன்ட்டனியை ஏற்றி விடுவேன்’ என்று இவர் கூற, ஷாக்காகியிருக்கிறார் நிவேதா. ஏன்? வண்டி ஓட்டதான் கற்றுக் கொண்டார். டபுள்ஸ் அடிக்க கற்றுக் கொள்ளவில்லையே? விஜய் ஆன்ட்டனிங்கற ஆளையெல்லாம் வண்டியில ஏற்ற முடியாதுன்னு சொல்ல முடியாதல்லவா? எப்படியோ விழாமல் வண்டி ஓட்டியிருக்கிறார்கள் இருவரும்.

சரி போகட்டும்… விஜய்யின் சர்கார் வருகிற அதே நாளில் திமிருபுடிச்சவன் படமும் வருதே, ஏன்? விஜய்யின் குடும்பத்துடன் வெகு நெருக்கமாக பழகி வரும் விஜய் ஆன்ட்டனிக்கே இது தர்ம சங்கடமாக இருந்திருக்கலாம். ஆனால் நிஜத்தை பாசி மீது நடப்பது போல நிதானமாக சொல்லி முடித்தார்.

“படம் ரெடியாகிருச்சு. வயிற்றுப்பிள்ளையை பத்து மாசம் தாண்டியும் உள்ளேயே வச்சுருக்க முடியாதல்லவா? அதான்… வேற ஒண்ணும் காரணமில்ல. அதுமட்டுமல்ல, இந்தப்படத்துக்காக கடுமையா உழைச்ச டைரக்டர் கணேஷா தன் படத்தின் ரிலீசுக்காக அதுக்கு மேலயும் காத்திருப்பது முறையில்ல” என்றார்.

ஒன்று கே.பி.எஸ் பாட்டாகவும், இன்னொன்று டி.எம்.எஸ் பாட்டாவும் இருந்துட்டு போகட்டுமே?

1 Comment
  1. அஜீத் says

    சர்க்கார் படுதோல்வி படம்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
திருட்டுப்பட்டம் வாங்கறதுக்காக சினிமாவுக்கு வரல! – ஏ.ஆர்.முருகதாஸ் ஆவேசம்!

https://www.youtube.com/watch?v=ltuC0a93Jos

Close