நடிகைக்கு பக்கத்துல நான்தான் உட்காருவேன்! கட்டி உருண்ட சினிமாக்காரர்கள்
‘மூச்’ என்ற படம் விரைவில் திரைக்கு வரப்போகிறது. இது ஆவிக்கும் தாய்க்குமான போராட்டத்தை மையப்படுத்திய கதையாம். இரண்டு குழந்தைகளை ஒரு தாயும் நேசிக்கிறாள். ஒரு பேயும் நேசிக்கிறது. எனக்குதான் குழந்தைகள் என்று அடித்துக் கொள்ள, யாருக்கு அவர்கள் என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ். இதில் அந்த பேயாக நடித்திருப்பவர் மிஷா கோஷல் என்ற இளம் நடிகை. பார்ப்பதற்கு பெங்களூர் தக்காளி போலிருக்கும் இவரை பேய் என்று ஏற்றுக்கொள்வதே அநியாயம். அதைவிட, அநியாயம் இவருக்காக இரண்டு பேர் அடித்துக் கொண்டு கட்டி உருண்டதுதான்.
விஷயம் வெளியாகி, படத்தை விடவும் பரபரப்பை கூட்டிவிட்டது. வேடிக்கை என்னவென்றால், மேற்படி விஷயத்தை கசிய விட்டவரே படத்தின் இயக்குனர் வினு பாரதிதான். (ஒருவேளை பப்ளிகுட்டிக்காக இருக்குமோ?)
இதை இயக்குனரின் வாயாலேயே கேட்பதுதான் சுவாரஸ்யம். ‘குன்னுர்ல படப்பிடிப்பை முடிச்சுட்டு நான் ஒரு கார்ல திரும்பிகிட்டிருந்தேன். மற்றவங்க எல்லாரும் ஒரு பஸ்சில் பின்னாடி வந்துகிட்டு இருந்தாங்க. திடீர்னு பஸ் டிரைவர்ட்டயிருந்து போன். சார்… எங்கயிருக்கீங்க. எங்க இருந்தாலும் வண்டிய அப்படியே நிறுத்துங்க. நான் வந்துகிட்டேயிருக்கேன். அவசரம்னார். ஏன்? விஷயத்தை போன்லேயே சொல்லுங்க’ என்றேன் நானும் பதற்றமாக. இல்ல சார்… பஸ்ல ரெண்டு பேரு. பயங்கரமா கட்டி உருளுறாங்க. ஜன்னலை உடைச்சிகிட்டு வெளியிலே விழுந்துருவாங்களோன்னு பயமா இருக்கு என்றார். என்ன காரணமா இருக்கும்னு யோசிச்ச நானும் வண்டிய மேட்டுப்பாளையத்துலேயே நிறுத்திட்டேன்.
அதற்குள் பஸ் வந்திருச்சு. என்னன்னு விசாரிச்சா, படத்தோட ஹீரோயின் மிஷா கோஷல் பக்கத்துல நான்தான் உட்காருவேன் என்று இரண்டு பேருக்குள்ள சண்டை வந்திருச்சு சார். பயங்கரமா அடிச்சிக்கிறாங்க என்று கூறி, எல்லாரையும் பஸ்லேர்ந்தே இறக்கி விட்டுட்டார். அப்புறம் கெஞ்சி கூத்தாடி அவங்களையெல்லாம் பஸ்சில ஏத்தி அனுப்புனேன்…
‘அப்புறம் மிஷாவை உங்க வண்டியில ஏத்திட்டு போயிட்டீங்களாக்கும்?’ என்று கேட்கதான் ஆசை. ஆனால் நாவை அடக்குதே நாகரீகம்!