முதன் முறையாக விஜய்சேதுபதி படத்திற்கு…
நாளை வெளியாகவிருக்கிறது இறைவி. விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா மூவரும்தான் ஹீரோ. இதில் விஜய் சேதுபதிக்கு மட்டும் சற்றே உயர்ந்த சேர் போட்டு பார்க்கிறது ரசிகர் வட்டாரம். ஏனென்று இதற்கு தனியாக இடம் சுட்டி பொருள் விளக்க தேவையில்லை. மார்க்கெட்டில் இப்போதைய ராசா இம்மூவரில் விஜய்சேதுபதிதான்! இதற்கு முன் பல ஹிட்டுகளை தந்தவர் என்றாலும், இறைவி விஜய் சேதுபதிக்கு ஸ்பெஷல்தான்.
இன்னொரு மணிரத்னம், இன்னொரு பாரதிராஜா என்றெல்லாம் இன்டஸ்ட்ரி கொண்டாடிக் கொண்டிருக்கிறது இறைவி படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை. அந்த நம்பிக்கையை அவர் ஒவ்வொரு படத்திலும் காப்பாற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இந்த நேரத்தில்தான் அவரது நீண்டகால தயாரிப்பான இறைவி திரைக்கு வருகிறது. இவரையும் விஜய் சேதுபதியையும் கருத்தில் கொண்டு தியேட்டர்களை வளைத்தாலும், வளைக்கப்பட்ட தியேட்டர்களின் எண்ணிக்கைதான் இப்போது ஹைலைட். விஜய் சேதுபதிக்கான விசேஷமும் கூட.
தமிழகத்தில் மட்டும் 450 தியேட்டர்களில் இப்படம் வெளியாகிறது. இதற்கு முன் விஜய் சேதுபதி நடித்த எந்த படத்திற்கும் இந்தளவுக்கு தியேட்டர்கள் வளைக்கப்பட்டதில்லையாம். அதுமட்டுமல்ல, சுமார் 50 பேர் கொண்ட டெக்னிகல் குழுவை கொண்டு ஒவ்வொரு தியேட்டரையும் கூட்டத்தையும் டிக்கெட் விற்பனையையும் மானிட்டர் செய்யப் போகிறார்களாம். ஏன்? இன்னாத்துக்கு?
அதான் உள்ளூர் தியேட்டர்லேயே படத்தை திருட்டு விசிடி எடுக்குறானுங்களே…? அதை எப்படி தடுப்பதாம்?
தயவு செய்து மணிரத்னம்,பாரதிராஜா என்று கூறாதீர்கள் அவர்களின் இடத்தை கார்த்திக் சுப்ராஜ் தொட அதிக உழைப்பு தர வேண்டும்