பிரெஞ்ச்காரியா இருந்தாலும் தமிழச்சி ஆகிட்டீங்க! ஏழைகளின் எமிஜாக்சனை பாராட்டிய அரசியல்வாதி
அரசியல் மேடைக்கும் சினிமா மேடைக்கும் அதிக பட்சம் ஆறு வித்தியாசம் கூட இருக்காது. அங்கும் பொன்னாடைகள், புகழுரைகள்… இங்கும் பொன்னாடைகள், புகழுரைகள் என்று சேம் பிளட் கொப்பளிக்கும். இருந்தாலும் சில சினிமா மேடைகளில் பழுத்த அரசியல்வாதிகளான நல்லக்கண்ணு, பழ.நெடுமாறன் ஆகியோர் வந்தால், அந்த சினிமாவுக்கே அது பெருமையல்லவா?
சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த மேல்நாட்டு மருமகன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் பிரபல அரசியல் தலைவர் பழ.நெடுமாறன். அவருடன் தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகனும் கலந்து கொண்டார். இந்த படத்தை இயக்கியிருப்பவர் எம்.எஸ்.எஸ் என்ற அறிமுக இயக்குனர். தலைவர்கள் இருவர் பேச்சிலும் ஒரு பார்மாலிடியான பாராட்டுகள்தான் இருக்கப் போகிறது. அதைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்று நினைத்தால், நம் எண்ணத்தை முடியடிக்கும் விதத்தில் சற்றே சுவாரஸ்யத்தை தூவ விட்டார் த.வா.உ கட்சித்தலைவர் வேல்முருகன்.
இந்த படத்தோட ஹீரோயின் ஆன்ட்ரியன், என் பக்கத்து மாநிலமான பாண்டிச்சேரியில்தான் குடியிருக்கிறார். பேசிக்கலாம் அவர் பிரெஞ்ச் பொண்ணு. ஆனால் இந்த மேடையில் பேசும்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் சிந்தினார். இது தமிழர்களுக்கே உரிய மரபு. அந்த வகையில் அவரும் தமிழச்சி ஆகிவிட்டார் என்று பாராட்ட, அதற்கொரு முறை அழுது வைத்தார் அந்த ஆன்ட்ரியன்.
ஏழைகளின் எமி ஜாக்சன் என்று பாராட்டுகிற அளவுக்கு எளிமையான அழகுடன் இருக்கும் ஆன்ட்ரியன், படத்திலும் பிரெஞ்ச் காரியாகவே வருகிறார் என்பதுதான் ஆறுதல். இல்லேன்னா… மதராசப்பட்டினம் எமியை சுத்த தமிழச்சியா காட்டி கொல்றாங்களே… அந்த தண்டனைக்கு சற்றும் குறையாமலிருக்கும் இந்த தண்டனை!
To listen this news in audio click below ;-