எல்லாமே ட்ராமா! மக்களை மரை கழல விட்ட கவுதமி!

சில தினங்களுக்கு முன் ரேடியோ சிட்டி எப்.எம் ஸ்டேஷனில் நடைபெற்ற ஒரு சம்பவம், வைரல் ஆகிவிட்டது. பேட்டியில் கமல் ஹாசனின் பிரிவை பற்றியும், ஜெ.மரணம் குறித்து மோடிக்கு கடிதம் எழுதியது குறித்தும் ஆர்.ஜே.முன்னா கேள்வி கேட்க, “இந்தக் கேள்வியை எப்படி கேட்கலாம்? ஒரு நாகரீகம் வேண்டாமா?” என்றெல்லாம் எகிறிவிட்டார் கவுதமி. இந்த வீடியோ வெளியே வந்ததுதான் தாமதம். கவுதமிக்கு நேர்ந்த கஷ்டம் என்ற தலைப்பில் கூடி கூடி விவாதிக்க அவருக்கு பின்னால் ஒரு கூட்டமே திரள ஆரம்பித்துவிட்டது.

ஒரே பரபரப்பு. இத இத இததான் எதிர்பார்த்தேன் என்பது போல செம குஷியானார்கள் சம்பந்தப்பட்ட முன்னாவும் கவுதமியும். இந்த சண்டையை நிஜ சண்டை என்று நம்பி, மணிக்கணக்காக விவாதித்த மங்கூஸ் மக்களுக்கு நிஜ நிலவரம் இன்றுதான் தெரிய வந்திருக்கிறது. என்னவாம்? அவ்வளவும் ட்ராமா!

ரேடியோ சிட்டி எப்.எம்.ஸ்டேஷனில் ஆர்.ஜேவாக பணியாற்றப் போகிறார் கவுதமி. தினந்தோறும் இரண்டு மணி நேரம் நிகழ்ச்சியை தொகுத்தளிக்கப் போகிறாராம். மக்களின் மைண்டை ஓரிடத்தில் குவித்தால்தான், இவர் நடத்தப் போகும் நிகழ்ச்சிக்கு ஒரு பில்டப் கிடைக்கும். என்ன செய்யலாம் என்று யோசித்தவர்கள் இப்படியொரு ட்ராமா ஆடிவிட்டார்கள்.

நமது கேள்வியெல்லாம் இதுதான். கமல்ஹாசனே வேண்டாம் என்று விட்டு விலகி ஓடி வந்த கவுதமி, தனக்கான பப்ளிசிடிக்கு மட்டும் அவரை மீண்டும் இழுத்துக் கொள்வது எந்த விதத்தில் நியாயம்? ஒருவேளை ஜெ. மரணம் குறித்து மோடிக்கு கடிதம் எழுதியதே கூட கவுதமியின் பப்ளிசிடி பசியாக இருக்குமோ?

இத்தனை காலம் இவரை நம்பிய கமல்தான் ஐயோ பாவம்!

https://youtu.be/CRUGBUSM2Rg

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
யாருகிட்ட வந்து? சிலுப்பிய விஜய் சேதுபதி! பொங்கல் ரேசிலிருந்து பின்வாங்கிய புரியாத புதிர்

Close