பொதுவெளியில் பஞ்சாயத்து கூட்டிய நரேன்! கவுதம் மேனன் சரண்டர்!

கடந்த இரண்டு நாட்களாக கோடம்பாக்கத்தின் குடுமிப்பிடி நிகழ்ச்சியில், அதிக கைதட்டல் வாங்கியது ‘நரகாசுரன்’ பட விவகாரம்தான். படத்தின் இயக்குனர் நரேன் கார்த்திக், அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக தன்னுடன் பார்ட்னர்ஷிப் போட்ட கவுதம் மேனன் பற்றி வெளிப்படையாக சில விஷயங்களை கொளுத்திப்போட, பற்றிக் கொண்டது ஏரியா.

வட இந்தியாவில் ஷுட்டிங்கில் இருந்த கவுதம் மேனனை துளைத்து எடுத்துவிட்டார்கள் பத்திரிகையாளர்கள். கார்த்திக் நரேனின் ட்விட் வெளியான சில மணி நேரங்களுக்குள் இருவருமே செல்போனை ஆஃப் பண்ணிவிட்டு நாட் ரீச்சபுளுக்குள் நுழைய… முழுசாக 24 மணி நேரத்திற்குள் சண்டை குறித்த விளக்கத்தை அளித்திருக்கிறார் கவுதம்.

இயக்குனர் கார்த்திக் நரேனின் ட்வீட் என்னை அதிருப்தி அடைய வைத்தது. மீடியாக்களிடம் இருந்து பல போன் கால்கள் வந்ததும் அப்செட் ஆகி பதிலுக்கு ட்வீட்டினேன். நான் அப்படி செய்திருந்திருக்கக் கூடாது. அதற்காக நான் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நிறைய போன் கால்கள் வந்ததால் அப்படி செய்துவிட்டேன்.

நரகாசூரன் ஸ்க்ரிப்ட் விஷயத்தில் நான் தலையிட்டது இல்லை. கார்த்திக் கேட்பதை கொடுக்குமாறு தான் முதலீட்டாளர்களிடம் கூறினேன். அவருக்கு சுதந்திரம் கொடுத்தேன். அதிக சம்பளம் கொடுத்து அவர் கேட்ட நடிகர்களை நடிக்க வைத்தோம். டீஸர், ட்ரெய்லர் எல்லாமே அவருடையது தான்.

படத்தின் பிஜிஎம்மை கார்த்திக் மேசிடோனியாவில் உருவாக்கினார். அதற்கும் ஏற்பாடு செய்தோம். நான் அழைத்து வந்த முதலீட்டாளர்கள் மூலம் நிறைய செலவு செய்துள்ளோம். துருவ நட்சத்திரம் போன்ற பெரிய படத்திற்கு நிதியை திருப்பிவிடும் அளவுக்கு இந்தப்படத்தின் பிசினஸ் பெரிது அல்ல. நரகாசூரன் லாபத்தில் 50 சதவீதம் நான் கேட்கவில்லை. படத்தில் எனக்கு பங்கு இல்லை என்று தெரியும்.

நான் படத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கார்த்திக் விரும்பினால் நான் மகிழ்ச்சி அடைவேன். ஏனென்றால் அதன் பிறகு படம் என் பொறுப்பு அல்ல. மார்க்கெட் எப்படி செயல்படுகிறது என்பதை தெரியாமலும், சிலர் பேச்சை கேட்டும் கார்த்திக்கிற்கு கோபம் வந்துள்ளது என்பது புரிகிறது. பட ரிலீஸை யாராலும் தடுக்க முடியாது.

அண்மை காலமாக பிற படங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுடன் ஒப்படும்போது நரகாசூரன் பிரச்சனை ஒன்றுமே இல்லை. ஒரு குழு நல்லபடியாக வேலை பார்த்தால் அதை கெடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். படத்தை முடித்து ரிலீஸ் செய்ய எங்களிடம் திட்டம் உள்ளது. இன்னும் சில நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். அரவிந்த்சாமி கார்த்திக் தனது அடுத்த படத்தை துவங்குவதை நாங்கள் தடுக்க மாட்டோம். அவர் தாராளமாக செய்யலாம், ஏற்கனவே வேலையை துவங்கிவிட்டார். முழு பணத்தையும் கொடுக்கும் வரை டப்பிங் பேசமாட்டேன் என்று கூறிய அரவிந்த்சாமி பணம் கொடுத்த பிறகு பேசுவார்.

கார்த்திக் மற்றும் எனக்கு இடையேயான பிரச்சனை தீர்க்கப்பட்டது. படம் விரைவில் ரிலீஸாகும் என்று தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்.

தற்காலிகமாக வாயடைச்சாச்சு. அப்புறம்?

Read previous post:
ரஜினிக்குப் பின் அதிக கலெக்‌ஷன் குவிக்கும் ஹீரோ விஜய்யா? அஜீத்தா?

https://www.youtube.com/watch?v=81ZqKvqxYoA&t=108s

Close