காவிரி மேலாண்மை வாரியம்! ரஜினியின் தெளிவான ட்விட்!

இந்தியாவின் அகலமான ஆழமான குப்பைத் தொட்டி தமிழ்நாடுதான் என்பதை ஒவ்வொரு திட்டங்களாக நிரூபித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு (காங்கிரஸ்-பா.ஜ.க இரண்டும்தான்) தமிழகத்தின் நியாயமான கோரிக்கைகளை கூட நரி தந்திரத்தோடு மறுத்து வருவதை பொங்க பொங்க அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

உச்சநீதிமன்றமே சொன்ன பிறகும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இழுத்தடிக்கும் பா.ஜ.க அரசின் பாரா முகத்திற்கு தமிழகம் என்ன தண்டனை கொடுக்கப் போகிறதோ? அதை விடுங்கள்…

வழக்கம் போல காவிரி விவகாரத்தில் ரஜினி அமைதி காப்பார் என்று நினைத்துக் கொண்டிருக்கிற அத்தனை பேருக்கும் ஷாக். இன்று அழுத்தமான கருத்து ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் அவர்.

‘காவிரி விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்று மட்டுமே நாம் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தீர்வாக இருக்க முடியும்’ என்பதுதான் அந்த ட்விட்.

காவிரியில் தண்ணி வருதோ, இல்லையோ? எங்க கண்ல தண்ணி வந்திருச்சு ரஜினி சார். உங்க போல்ட்நஸ் தொடரட்டும்!

1 Comment
  1. Bala says

    rajini tweet pottu pudungira porran. yenda kuthikareenga

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பொதுவெளியில் பஞ்சாயத்து கூட்டிய நரேன்! கவுதம் மேனன் சரண்டர்!

Close