முதல்வர் எடப்பாடி கமல்ஹாசன் சந்திப்பு நடக்குமா?

கடைசி நிமிஷம் வரைக்கும் ரப்பராக இழுத்துவிட்டு, காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் புளியேப்பம் விடும் போலிருக்கிறது மத்திய அரசு. ஆட்டுவிக்கிறவன் அவன். ஆடுகிறவன் நான்… என்கிற நிலையிலிருக்கும் மாநில அரசு, என்னதான் ஒப்புக்கு சப்பாணியாக இருந்தாலும் ஒரு முடிவெடுக்க வேண்டுமே?

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில்தான் பிரஸ்சை சந்தித்தார் கமல்ஹாசன். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கிற விஷயத்தில் மத்திய அரசு நடந்து கொள்ளும் முறையை கண்டித்தவர், அப்படியே மாநில அரசுக்கும் குட்டு வைத்தார். இருந்தாலும் முதல்வர் பழனிச்சாமியை நேரில் சந்தித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க சொல்ல விரும்புகிறாராம். முறைப்படி முதல்வர் அலுவலகத்தில் முன் அனுமதி கோரப்பட்டிருப்பதாக கூறினார்.

ஆனால் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கமல்ஹாசனையும் ரஜினிகாந்தையும் விமர்சித்து வரும் எடப்பாடி பழனிச்சாமியும், அவரது அமைச்சர் பெருமக்களும், இந்த சந்திப்பை விரும்புவார்களா? முன் அனுமதி கொடுக்கப்படுமா? என்பது டவுட்டுதான். அரசியலில் துளி கூட பெயர் எடுத்துவிடக் கூடாது என்று முனைப்பு காட்டும் இவர்கள், இந்த சந்திப்பினால் கமல்ஹாசனுக்கு நல்ல பெயர் சென்றுவிடக் கூடாது என்று நினைப்பார்கள் அல்லவா?

இது ஒருபுறம் இருக்க, தூத்துத்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக வரும் 1 ந் தேதி ஞாயிற்றுக் கிழமை கமல் அங்கு செல்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
காவிரி மேலாண்மை வாரியம்! ரஜினியின் தெளிவான ட்விட்!

Close