நெருங்கிய ஞானவேல்ராஜா! தப்பி ஓடிய தமிழ்ராக்கர்ஸ்!
“நாங்க பதவிக்கு வந்து ரெண்டே மாசம்தான். மவனே… நீ எங்கிருந்தாலும் தூக்குறோம்” என்று தமிழ்ராக்கர்சுக்கு எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர் சங்கத்தின் இப்போதைய செயலாளர் ஞானவேல்ராஜா, ட்வென்ட்டிபோர் அவர்ஸ்சும் அந்த விஷயத்தையே நினைத்துக் கொண்டிருந்தார். எங்கெங்கே எப்படியெப்படியெல்லாம் மூவ் பண்ண முடியுமோ, அப்படியப்படியெல்லாம் மூவ் பண்ணிய அவருக்கு ரிசல்ட்…. பச்சை விளக்குதான்! யெஸ்… ஒருவழியாக தமிழ்ராக்கர்ஸ் என்கிற உலகத்தின் மாபெரும் திருட்டு விசிடிக்காரனை போனில் தொடர்பு கொண்டேவிட்டார்.
இந்த சந்தோஷ செய்தியை அவர் தனது வாட்ஸ் ஆப் குழுவிலும் பகிர்ந்து கொண்டதாக சொல்கிறார்கள் சிலர். இன்னும் சில தினங்களில் அவனை நேர்லேயோ, ஸ்கைப்பிலேயோ சந்திச்சு பேசிடுவேன். திருட்டு விசிடி க்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று அவர் சந்தோஷப்பட்டதாகவும் தகவல். ஆனால் கடைசி நேரத்தில் உஷாரான மேற்படி திருட்டு ஆசாமி, அதற்கப்புறம் ஞானவேல்ராஜாவுடனான தொடர்பை முற்றிலும் நிறுத்திவிட்டானாம்.
வளைச்சு வளைச்சு தேடி வாலை பிடிச்சு இழுக்குற நேரத்தில், இப்படி வழுக்கிட்டு ஓடிட்டானே… என்று கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம் அவர். இருந்தாலும் இன்னொரு முயற்சியாக இருக்கட்டுமே என்றுதான் வெங்கய்யா நாயுடுவையும் சந்தித்திருக்கிறார்கள்.
வந்தா மல… போனாலும் மல ங்கிற மாதிரியே இருக்கு இந்த போராட்டம்?
https://youtu.be/jTHAGMlE2Z4