ஹீரோயினாகும் கவுதமி மகள்! கைகொடுக்கும் ஹீரோ?
“இதற்காகதான் ஆசைப்பட்டாயா பாலகுமாரி?” என்று கமல் கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை! பலரும் எதிர்பார்த்தபடியே தன் மகளை ஹீரோயின் ஆக்க முடிவெடுத்துவிட்டாராம் கவுதமி. 13 ஆண்டுகள் கமல் வீட்டில் ராணி போகமாக கவுதமி வாழ்ந்தாலும், மகள் சுப்புலட்சுமி விஷயத்தில் மாற்றாந் தந்தை மன பாவத்துடன்தான் நடந்து வந்தாராம் கமல். இதையெல்லாம் கண்டு மனம் புழுங்கிப் போன கவுதமி, விலங்குகளை உடைத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.
எப்படி நடிகை மேனகா தன் மகள் கீர்த்தி சுரேஷை தமிழின் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக்கினாரோ, அப்படியே தன் மகளையும் ஆக்கிவிடுவது என்று திட்டமிட்டுவிட்டதாக தகவல். அதுவும் சோப்ளாங்கி ஹீரோக்களுடன் சோடி போட்டால், வருஷத்துக்கு ஒரு பிளாப் படம் கூட கிடைக்காது என்பதை நன்றாக புரிந்து வைத்திருக்கும் கவுதமி, முதல் வேலையாக செய்தது என்ன தெரியுமா? சிவகார்த்தியேன், தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு போன் போட்டு, மகளுக்காக பேசியதுதான்.
முதல் அறிமுகமே நரி முகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் கவுதமி, முன்னணி நிறுவனங்களுக்கும் தன் எண்ணத்தை தெரிவித்து வருகிறாராம். விரைவில் மேளதாள முழக்கங்களுடன், முன்னணி நடிகருடன் சுப்புலட்சுமி சேர்ந்திருக்கும் புகைப்படங்களுடன் கூடிய அறிவிப்பு வந்தால், யாரும் அதிர்ச்சியடையத் தேவையில்லை.
சோழ பரம்பரையிலிருந்து மேலும் ஒரு இளவரசி… வாம்மா மின்னலு!
To listen Audio Click Below:-
https://youtu.be/SfXbu3kRrb0